தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக ஆதரிக்க காரணம் என்ன? - மு.க.ஸ்டாலின் விவரிப்பு

தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக ஆதரிக்க காரணம் என்ன? - மு.க.ஸ்டாலின் விவரிப்பு
Updated on: 
1 min read

சென்னை: “தீர ஆராய்ந்துதான், நடைமுறைக்கு சாத்தியமானதில் நமக்கு சாதகமான வடிவிலேயே தொகுதி மறுவரையறை திமுக ஆதரவளிக்கும் என்ற நிலைப்பாடு இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நியாயமான தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிக்கப்போவதாக இன்று (நவ.28) திமுக அறிவித்துள்ளது. மேலும், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் கொண்டு வர உள்ள தொகுதி மறுவரையறை மசோதாவால், தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் அக்கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்துக்குப் பிறகு, இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: “நியாயமான தொகுதி மறுவரையறை கோரிக்கைகளை ஏற்ற சட்டமுன்வரைவிற்குத் திமுக ஆதரவு. கடந்த ஏப்ரல் மாதம் எந்தக் காரணங்களுக்காக தொகுதி மறுவரையறை சட்டமுன்வரைவை எதிர்த்தோமோ, அந்த இரண்டு கோரிக்கைகளும் எழுத்துப்பூர்வமாகப் புதிய சட்டமுன்வரைவில் சேர்க்கப்பட்டுள்ளன.

இது, 2024-ஆம் ஆண்டு முதல் திமுக மேற்கொண்ட தொடர் போராட்டங்களுக்கான வெற்றி. தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் அனைத்துக்குமான வெற்றி. 1971 மக்கள்தொகையின் அடிப்படையிலேயே அனைத்து மாநிலங்களுக்கும் 50% தொகுதிகள் உயர்வு எனும் இந்த தொகுதி மறுவரையறை மசோதாவைத் தவறவிட்டால் என்ன நடக்கும் என உணர்ச்சிவயப்படாமல் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அதையெல்லாம் தீர ஆராய்ந்துதான், நடைமுறைக்கு சாத்தியமானதில் நமக்கு சாதகமான இந்த வடிவிலேயே தொகுதி மறுவரையறை நடந்திடத் திமுக ஆதரவளிக்கும் என்ற நிலைப்பாடு இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது” இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக ஆதரிக்க காரணம் என்ன? - மு.க.ஸ்டாலின் விவரிப்பு
நியாயமான தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு: திமுக அறிவிப்பு

X