தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்கர்

 
தமிழகம்

“திமுக மீது காங்கிரஸ் தொண்டர்கள் வேதனையில் இருக்கிறார்கள்” - கிரிஷ் சோடங்கர் குமுறல்

செய்திப்பிரிவு

தமிழக காங்​கிரசில் சமீபத்​தில் புதி​தாக 71 மாவட்ட தலை​வர்​கள் நியமிக்​கப்​பட்​டனர். அவர்​களு​டன் அகில இந்​திய காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே, காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்தி உள்​ளிட்​டோர் அவசர ஆலோ​சனை நடத்​தினர்.

டெல்​லி​யில் உள்ள காங்​கிரஸ் தலைமை அலு​வல​கத்​தில் நடை​பெற்ற இந்த கூட்​டத்​தில் மாவட்​டத் தலை​வர்​கள் கட்​சி​யில் உள்ள குறை​பாடு​களை​யும், கூட்​டணி கட்​சி​யான திமுக மீதான அதிருப்​தி​யை​யும் கொட்​டித் தீர்த்​துள்​ளனர்.

          

குறிப்​பாக திமுக தொடர்ந்து காங்​கிரசை அலட்​சி​யப்​படுத்​துகிறது. கூட்​டணி தொடர்​பான பேச்​சு​வார்த்​தைக்கு நாம் தயா​ராக இருந்​தும், அவர்​கள் இன்​னும் குழு அமைக்​க​வில்​லை. கடந்த முறை 25 தொகு​தி​கள்​தான் கொடுத்​தார்​கள். இந்​த​முறை மேலும் குறைப்​ப​தாக சொல்​கி​றார்​கள். அப்​படி செய்​தால் நாம் எப்​படி வளர முடி​யும். எனவே, வரும் தேர்​தலில் காங்​கிரஸுக்கு கவுர​வ​மான எண்​ணிக்​கை​யில் தொகு​தி​களை ஒதுக்க வேண்​டுமென மாவட்​டத் தலை​வர்​கள் வலி​யுறுத்​தி​ய​தாக கூறப்​படு​கிறது.

இதை கேட்​டறிந்த ராகுல் காந்​தி, ‘கூட்​டணி விவ​காரங்​களை மேலிடம் கவனித்​துக் கொள்​ளும். அதே​நேரம் கட்​சிப் பணி​களில் சமரசம் செய்ய முடி​யாது. தமி​ழ​கத்​தில் பல்​வேறு இடங்​களில் பூத் கமிட்​டிகள் பலவீன​மாக உள்​ளன. அவற்றை உடனடி​யாக சரிசெய்​யுங்​கள். சரி​யாக வேலை செய்​யா​விட்​டால் 90 நாட்​களில் உங்​கள் பதவி பறிக்​கப்​படும்​’என கறா​ராக தெரி​வித்​துள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

ஆலோ​சனைக் கூட்டத்​துக்குப் பின் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்கர் செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கூட்டணிப் பேச்சு​வார்த்​தைக்காக காங்கிரஸ் தரப்பில் கடந்த நவம்பர் மாதமே குழுவை அறிவித்​து​விட்​டோம். தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேச்சு​வார்த்​தையைத் தொடங்​குமாறு கேட்டுக்​கொண்​டோம். ஆனால், 70 நாட்கள் கடந்தும் திமுக தரப்பில் இன்னும் குழு அமைக்​கப்​பட​வில்லை. இருப்​பினும், ஒருமித்த கருத்​துடன் சுமுகமான முடிவு எட்டப்​படும் என்ற நம்பிக்​கையில் காத்திருக்​கி​றோம்.

எங்​களுக்கு ஒதுக்​கப்​படும் தொகு​தி​கள் எவை என்​பது முன்​கூட்​டியே தெரிந்​தால்​தான், அங்கு வெற்​றியை உறுதி செய்​வதற்​கான களப்​பணி​களை திட்​ட​மிட்​டுத் தொடங்க முடி​யும். திமுக இன்​னும் பேச்​சு​வார்த்​தைக் குழுவை அறிவிக்​காதது எங்​களது தொண்​டர்​களிடையே மிகுந்த வேதனையை ஏற்​படுத்​தி​யுள்​ளது. குழு எப்​போது அமை​யும் என அவர்​கள் ஆவலுடன் எதிர்​பார்த்​துக் காத்​திருக்​கி​றார்​கள். தேர்​தலுக்கு இன்​னும் மிகக் குறுகிய காலமே உள்ள நிலை​யில், திமுக ஏன் இன்​னும் குழு அமைக்​க​வில்லை எனத் தெரிய​வில்​லை. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

காங். தலை​மைக்கு வருத்​தம்: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், “தேர்தல் பணிகளை துரிதப்படுத்த உடனடியாக கூட்டணி பேச்சுவார்த்தை குழுவை நியமிக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் முழுவீச்சில் தேர்தல் களத்திற்குச் செல்ல முடியும். கடைசி நேரத்தில் குழுவை அமைப்பது தேவையற்ற குழப்பங்களுக்கு மட்டுமே வழிவகுக்கும். அதனால்தான் இப்போதே குழுவை அமைக்க வலியுறுத்துகிறோம்.

திமுக இன்னும் பேச்சுவார்த்தை குழுவை அமைக்காததில் எங்களது தேசிய தலைமைக்கு வருத்தமுள்ளது. எங்களது தலைவர்கள் வெளிப்படுத்திய கருத்துக்களைத் தமிழக முதல்வரை நேரில் சந்தித்துத் தெளிவுபடுத்துவோம். ராகுல் காந்தி உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் தமிழகத்துக்கு வருவதற்குத் தயாராகவே உள்ளனர். ஆனால், பேச்சுவார்த்தை குழு இன்னும் அமையாததால்தான் அவர்கள் வருகை தள்ளிப்போகிறது”என்றார்

SCROLL FOR NEXT