மல்லிகார்ஜுன கார்கே 
தமிழகம்

“ராகுல் காந்தி பிரதமரானதும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து” - காங்கிரஸ் தலைவர் கார்கே உறுதி

செய்திப்பிரிவு

புதுச்சேரி: ராகுல் காந்தி பிரதம​ரானதும் புதுச்சேரிக்கு மாநில அந்​தஸ்து வழங்​கப்​படும் என மல்​லி​கார்​ஜூன கார்கே வாக்​குறுதி அளித்​துள்​ளார்.

புதுச்​சேரி​யில் காங்​கிரஸ் சார்​பில் நேற்று நடந்த பொதுக்​கூட்​டத்​தில் கட்​சி​யின் தேசி​யத் தலை​வர் மல்​லி​கார்​ஜூன கார்கே பேசி​னார். பின்​னர் வேட்​பாளர்​களுக்கு தேர்​தலில் தரும் வாக்​குறுதி அட்​டைகளை தந்​தார். அதன்​பிறகு அந்த வாக்​குறு​தி​களை மல்​லி​கார்​ஜூன கார்கே அறி​வித்​தார். அதில் 3 வாக்​குறு​தி​கள் மட்​டும் இடம் பெற்​றிருந்​தன.

          

அதன் விவரம்: வரும் 2026-ல் காங்​கிரஸ் ஆட்​சி​யில் தொடக்​கக் கல்வி முதல் ஆராய்ச்​சிக் கல்வி வரை இலவச கல்வி அனை​வருக்​கும் தரப்​படும். ஆட்​சிக்கு வந்​தவுடன் கட்​டாயக் கல்​வித் திட்​டத்தை நிறைவேற்​று​வோம். இதுவே எங்​கள் முதல் கையெழுத்​தாக இருக்​கும். அரசு மற்​றும் தனி​யார் கல்​லூரி​களில் பயிலும் மாணவர்​களுக்கு மாதம் ரூ.2,000 கல்வி உதவித்​தொகை தரப்​படும்.

மாதந்​தோறும் ரூ.2,500 மதிப்​புள்ள மளி​கைப் பொருட்​கள் அனைத்து குடும்​பத்​துக்​கும் ரேஷன் கடைகளில் இலவச​மாக வழங்​கப்​படும். இந்த மளி​கைப் பொருட்​களை வீடு தேடி வந்து தரவும் நடவடிக்கை எடுப்​போம். தங்​கம் விலை உயர்​வால் சாமானிய மக்​கள் பெரிதும் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர்.

திரு​மண​மான பெண்​களுக்கு தாலி செய்ய தங்​கத்தை மானிய அடிப்​படை​யில் அரசு வழங்​கும். தாலிக்கு தங்​கம் வழங்​கும் திட்​டம் செயல்​படுத்​தப்​படும். ராகுல் காந்தி பிரதமர் ஆனவுடன் புதுச்​சேரிக்கு மாநில அந்​தஸ்து வழங்​கப்​படும். இவ்வாறு கார்கே பேசினார்.

SCROLL FOR NEXT