தமிழகம்

தமிழக மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி போட்டியின்றி தேர்வு

செய்திப்பிரிவு

சென்னை: ​மாநிலங்​களவை எம்​.பி. பதவிக்​கான இடைத் தேர்​தலில் காங்கிரஸ் வேட்​பாளர் பிர​வீன் சக்​ர​வர்த்தி போட்​டி​யின்றி தேர்வு செய்​யப்​பட்​டார்.

தமிழகத்​தில் நடந்து முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அதி​முக முன்​னாள் அமைச்​சர் சி.​வி. சண்​முகம் மயிலம் தொகு​தி​யில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றார்.

இதையடுத்​து, அவர் ஏற்​கெனவே வகித்து வந்த மாநிலங்​களவை எம்​.பி. பதவியை கடந்த மே 7-ம் தேதி ராஜி​னாமா செய்​தார். இந்த காலி இடத்​துக்கு ஜூன் 18-ம் தேதி இடைத் தேர்​தல் நடை​பெறும் என்று தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​தது.

இதற்​கான வேட்​புமனு தாக்​கல் கடந்த 1-ம் தேதி தொடங்கி 8-ம் தேதி நிறைவடைந்​தது. தவெக ஆதர​வில் காங்​கிரஸ் கட்​சி​யைச் சேர்ந்த பிர​வீன் சக்​கர ​வர்த்தி மற்​றும் 12 சுயேச்சை வேட்​பாளர்​கள் என மொத்​தம் 13 பேர் வேட்​புமனு தாக்​கல் செய்​தனர்.

மனுக்​கள் பரிசீலனை 9-ம் தேதி நடை​பெற்​றது. மாநிலங்​களவை எம்​.பி. பதவிக்கு போட்​டி​யிடும் வேட்​பாளர்​களுக்கு 10 எம்​எல்​ஏக்​களின் முன்​மொழிவு கடிதம் இருக்க வேண்​டும்.

அந்த வகை​யில், காங்​கிரஸ் வேட்​பாளர் பிர​வீன் சக்​ர​வர்த்தி தவிர மற்ற யாருக்​கும் எம்​எல்​ஏக்​களின் முன்​மொழிவு கடிதம் இல்​லாத​தால், 12 சுயேச்சை வேட்​பாளர்​களின் மனுக்​களும் நிராகரிக்​கப்​பட்​டன. பிர​வீன் சக்​கர​வர்த்​தி​யின் வேட்​புமனு மட்​டும் ஏற்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், வேட்​புமனுவை திரும்​பப் பெறு​வதற்​கான அவகாசம் நேற்​றுடன் நிறைவு பெற்​றது. இதையடுத்​து, மாநிலங்​களவை எம்​.பி.​யாக காங்​கிரஸ் வேட்​பாளர் பிர​வீன் சக்​ர​வர்த்தி போட்​டி​யின்றி தேர்வு செய்​யப்​படு​வ​தாக தேர்​தல் நடத்​தும் அலு​வலர் தேன்​மொழி அறி​வித்​தார்.

தொடர்ந்​து, பிர​வீன் சக்​கர​வர்த்​தி​யிடம் அதற்​கான சான்​றிதழ் வழங்​கப்​பட்​டது. பின்​னர், தலை​மைச் செயல​கத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தொகுதி மறுசீரமைப்​பு, ஒரே நாடு ஒரே தேர்​தல் என மாநில உரிமைக்கு எதி​ராக சில மசோ​தாக்​களை கொண்​டுவர பாஜக திட்​ட​மிட்​டுள்​ளது.

இதற்கு எதி​ராக​வும், தமிழக நலன்​கள், பிரச்​சினை​கள், கோரிக்​கைகளுக்​காக​வும் மாநிலங்​களவை​யில் எனது குரல் கட்​டா​யம் ஒலிக்​கும்.

முதல்வரின் பெருந்​தன்​மை

கூட்​ட​ணிக்கு மதிப்​பளித்து இந்த இடத்தை எங்​களுக்கு விட்​டுக் கொடுத்​தது முதல்​வர் விஜய்​யின் பெருந்​தன்​மை​யைக் காட்​டு​கிறது.

தவெக​வின் முதல் எம்​.பி.​யாக அக்​கட்​சி​யைச் சேர்ந்​தவரே சென்​றிருக்​கலாம் என்ற எண்​ணம் அதன் தொண்​டர்​களிடம் இருப்​பது இயல்​பானது. ஆனால், தேசிய அரசி​யலில் எனக்கு நீண்​ட​கால அனுபவம் இருப்​ப​தால், தமிழகத்​தின் குரலை அங்கு வலு​வாகப் பதிவுசெய்ய முடி​யும் என்ற அடிப்​படை​யில் இந்த வாய்ப்பு தரப்​பட்​டுள்​ளது.

அதை முழு​மை​யாக நிறைவேற்​று​வேன். தமிழகத்​தில் புதிய அரசு அமைந்து ஒரு மாதமே ஆகி​யுள்ள நிலை​யில், எதிர்க்​கட்​சிகள் பல்​வேறு விமர்​சனங்​களை முன்​வைக்​கின்​றன.

ஆனால், முதல்​வர் தனது பிரச்​சா​ரத்​தி​லும், பதவி​யேற்பு விழா​விலும் கூறியது​போல, ஊழலற்ற, வெளிப்​படை​யான ஆட்சி வழங்​கு​வது​தான் இந்த அரசின் முதல் நோக்​கம். அதை நோக்​கியே அமைச்​சர​வை​யும் செயல்​பட்டு வரு​கிறது.

ஒரு மாதத்​தில் அரசி​யலிலும், நிர்​வாகத்​தி​லும் இவ்​வளவு பெரிய திருப்​பம் ஏற்​பட்​டிருப்​பது பா​ராட்​டத்​தக்​க விஷயமாகும். இவ்​வாறு அவர் கூறி​னார். மாநிலங்​களவை எம்​.பி.​யாக இவர் 2028 ஜூன் 29-ம் தேதி வரை சுமார்​ 2 ஆண்​டு காலம்​ பத​வி​யில்​ இருப்​பார்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT