உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன்

 
தமிழகம்

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி பாயும் புலியாக மாறி வருகிறது: அமைச்சர் விஸ்வநாதன் கருத்து

செய்திப்பிரிவு

திருவாரூர்: தமிழகத்தில் காங்​கிரஸ் இயக்​கம், பாயும் புலி​யாக மாறி வரு​கிறது என்​று உயர் கல்​வித் துறை அமைச்​சர் விஸ்​வ​நாதன் தெரி​வித்​துள்ளார்.

திரு​வாரூர் மாவட்​டம் மன்​னார்குடி அருகே பரவாக்​கோட்டை அரசு மேல்​நிலைப்​பள்ளிக் கட்​டிடங்​களை ஆய்வு செய்த அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: காங்​கிரஸ் இயக்​கம், நாளுக்கு நாள் பாயும் புலி​யாக மாறி வரு​கிறது. காங்​கிரஸ் கட்​சியைக் கடந்த காலங்​களைப் போல நினைத்​துக் கொண்​டிருக்​கக் கூடாது. நிமிர்ந்த நன் நடையோடு, அரசி​யல் களத்​தி​லும் போராட்​டக் களத்தி​லும் நிற்க காங்​கிரஸ் கட்சி தயா​ராக உள்​ளது. நாங்கள் திமுக கூட்​ட​ணி​யில் இல்​லை.

எங்​களை திமுக​வினர் விமர்​சனம் செய்​தால், நாங்​களும் விமர்​சனம் செய்​வோம். ஆனால், விமர்​சனம் என்​பது ஆரோக்​கிய​மான​தாக இருக்க வேண்​டும். துணைவேந்​தர் நியமனம் தொடர்​பான வழக்கு நீதி​மன்​றத்​தில் இருப்​ப​தால், வெளிப்​படை​யாக எதை​யும் சொல்ல முடி​யாது. அதேநேரத்​தில், பல்​கலைக்​கழகங்​களில் காலியாகவுள்ள துணைவேந்​தர் பதவிகளை நிரப்புவதில் முதல்​வர் விஜய் முனைப்​பாக உள்​ளார். அதற்​குரிய நடவடிக்​கைகளை சட்​டப்​படி அவர் மேற்​கொள்​வார். இவ்வாறு அவர் தெரி​வித்​தார்.

SCROLL FOR NEXT