தமிழகம்

அரசின் புதிய குளிர்சாதன சொகுசு பேருந்துகளின் நவீன வசதிகள், கட்டணம் - முழு விவரம்

செய்திப்பிரிவு

சென்னை: அரசு விரைவுப் போக்​கு​வரத்​துக் கழகத்​துக்கு ரூ.34.30 கோடி மதிப்​பிலான பல அச்​சுகள் கொண்ட 20 அதிநவீன குளிர்​சாதன சொகுசு பேருந்துகள் இயக்​கத்தை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் சென்னையில் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்​தார்.

அரசு போக்​கு​வரத்துக் கழகங்​கள் தொடங்​கப்​பட்டு 50-ம் ஆண்டு (1976- 2025) பொன்​விழா நடை​பெற்று வரு​வதையொட்டி போக்​கு​வரத்து கழகங்​களில் பணி​யாற்றி வரும் 1 லட்​சத்து 5,778 ஊழியர்​களுக்கு ரூ.3.33 கோடி மதிப்​பிலான சுவர் கடி​காரங்​கள் வழங்​கிடும் வித​மாக 10 போக்​கு​வரத்து ஊழியர்​களுக்கு சுவர் கடி​காரங்​களை முதல்​வர் வழங்​கி​னார்.

நிகழ்ச்​சிக்கு பின் அமைச்​சர் சிவசங்​கர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: சிறந்த பயண அனுபவத்தை இப்​பேருந்துகள் வழங்​கும். 1 கி.மீட்​டருக்கு 120 பைசா என்ற அடிப்​படை​யில் கட்​ட​ணம் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

மக்​களின் வரவேற்பை பொறுத்து கூடு​தல் பேருந்துகள் வாங்​கு​வது குறித்து முடி​வெடுக்​கப்​படும். தற்​போது டீசல் பேருந்துகள் இயக்​கப்​படு​கிறது, எதிர்​காலத்​தில் மின்​சார பேருந்துகளும் பயன்​பாட்​டுக்கு வரலாம். கிளாம்​பாக்​கத்​தில் இருந்து இந்த பேருந்​துகள் இயக்​கப்​படும்.

ஆம்னி பேருந்துகள் நீதி​மன்ற ஆணையை பெற்று கோயம்​பேட்​டில் இருந்து இயக்​கு​கின்​றனர். நீதி​மன்ற ஆணை​யின் காலக்​கெடு முடிந்த பின் அவர்​களும் கிளாம்​பாக்​கத்​தில் இருந்துதான் இயக்க வேண்​டும். இவ்​வாறு அவர் கூறினார்.

இந்​நிகழ்ச்​சி​யில், அமைச்​சர்​கள் மு.பெ.​சாமி​நாதன், பி.கே.சேகர்​பாபு, ஆ.ராசா எம்​.பி. மேயர் ஆர். பிரி​யா, துறை செய​லா​ளர் சுன்​சோங்​கம் ஜடக் சிரு, மாநகர போக்​கு​வரத்து கழக மேலாண் இயக்​குநர் த.பிரபுசங்​கர், அரசு விரைவுப் போக்​கு​வரத்​துக் கழக மேலாண் இயக்​குநர் மோகன், விஇ வணிக வாக​னங்​கள் நிறுவன முது​நிலை துணை தலை​வர் சுரேஷ் மற்​றும் உயர் அலு​வலர்​கள் கலந்து கொண்​டனர்.

பேருந்​தில் உள்ள நவீன வசதி​கள்: புதிய பேருந்துகளில் 2-க்கு 2 அமைப்​புடன் 51 வசதி​யான இருக்​கைகள், விசால​மான ஜன்​னல்​கள், மேல்​நிலை பொருட்​கள் வைக்​குமிடம், கால்​களை நீட்டி அமரும் வசதி​யுடன் கூடிய இருக்​கைகள், இரட்டை சார்​ஜிங் மையங்​கள், பாட்​டில் ஹோல்​டர், காலணி வைக்​கும் இடம், முழங்​கால் பாது​காப்பு அமைப்​பு, மேம்​பட்ட சஸ்​பென்​சன் அமைப்​பு, ஸ்டியரிங் ஸ்டெபிலிட்​டி, ஏர் ஸ்பிரிங்​கு​களில் குறைந்த அழுத்​தம், மேம்​பட்ட பிரேக்​கிங் மற்​றும் பாது​காப்பு அமைப்​பு​கள், தீ பாது​காப்பு அமைப்​பு, அவசர நிலை​யில் விரை​வாக பயணி​களை வெளி​யேற்ற அகல​மான ரூஃப் எஸ்​கேப் ஹட்ச், முன், பின் மற்​றும் பக்க மோதல்​களில் தாக்​கத்தை குறைக்​கும் பாது​காப்பு அமைப்​பு​கள், விபத்​துகளை தவிர்க்க வாக​னத்​தின் முன் மற்​றும் பின் பகு​தி​களில் கேம​ராக்​கள், வாகன செயல்​திறன் மற்​றும் கோளாறுகளை உடனுக்​குடன் கண்​டறிய மின்​னணு அமைப்​பு, ரிவர்ஸ் சென்​சார் வசதி மற்​றும் கேமரா உள்​ளிட்ட பல்​வேறு வசதி​களு​டன் இப்​பேருந்துகள் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளன.

கட்டண விவரம்: சென்னை - மதுரை - ரூ.790, சென்னை - திருநெல்​வேலி - ரூ.1,080, சென்னை - திருச்​செந்​தூர் - ரூ.1,115, சென்னை - சேலம் - ரூ.575, சென்னை - திருப்​பூர் - ரூ.800, சென்னை - பெங்​களூரு - ரூ.735, கோவை - சென்னை - ரூ.880, கோவை - பெங்​களூரு - ரூ.770, நாகர்​கோ​வில் - சென்னை - ரூ.1,215, திருச்சி - சென்னை - ரூ.565 என கட்​ட​ணம் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT