தமிழகம்

விளம்பர பலகை உரிமம் முறைகேடு புகார்: 2 வாரங்களில் விசாரணையை முடிக்க சென்னை மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: வெளிப்​புற விளம்​பரப் பலகைகள் வைப்​ப​தற்​கான உரிமம் வழங்​கு​வ​தில் முறை​கேடு நடப்​ப​தாக அளிக்​கப்​பட்ட புகாரில் 2 வாரங்​களில் விசா​ரணையை முடித்​து, லஞ்ச ஒழிப்​புத் துறை​யிடம் அறிக்கை தாக்​கல் செய்ய சென்னை மாநக​ராட்​சிக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

சென்னை வெளிப்​புற விளம்​பரப்​படுத்​து​வோர் சங்க உறுப்​பினர் எஸ்​.பிரேம்​கு​மார் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: வெளிப்​புற விளம்​பரப் பலகைகள் வைக்க உரிமம் கோரிய விண்​ணப்​பங்​கள் மீது, நகர வரு​வாய் அலு​வலர் அலு​வலக அதி​காரி​களு​டன் கூட்டு சேர்ந்​து, சென்னை வெளிப்​புற விளம்​பரப்​படுத்​து​வோர் சங்​கத் தலை​வர் பொன்​னப்​பன், செய​லா​ளர் கே.​வி.சுகு​மார், பொருளாளர் கே.ஆர்​.வெங்​கடேஷ், உறுப்​பினர் கருணாகரன் ஆகியோர் உரிமங்​கள் வழங்​கு​வது குறித்து தீர்​மானிப்​ப​தாக​வும், உதவி வரு​வாய் அலு​வல​ரான மாதவன் பாரபட்​ச​மாக செயல்​பட்​டு, சட்​ட​விரோத​மாக பணம் ஈட்​டு​வ​தாக​வும் கூறப்​படு​கிறது.

இது தொடர்​பாக கடந்த பிப்​. 18-ம் தேதி சென்னை மாநக​ராட்சி ஊழல் கண்​காணிப்​புப் பிரிவு, மாநக​ராட்சி ஆணை​யர், லஞ்ச ஒழிப்​புத் துறை இயக்​குநர் ஆகியோரிடம் அளித்த புகார் மீது விசா​ரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​தா​ரர் கோரி​யிருந்​தார்.

சட்டப்படி நடவடிக்கை

இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்​திரையன் முன் விசா​ரணை வந்​த​போது, மனு​தா​ரர் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் ஏ.முரளி, “பார​திய நியாய சன்​ஹிதா மற்​றும் ஊழல் தடுப்​புச் சட்​டத்​தின் கீழ் குற்​றம் என்​ப​தால் இதன் மீது உரிய விசா​ரணை நடத்தி நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்​புத் துறைக்கு உத்​தர​விட வேண்​டும்” என வாதிட்​டார்.

அப்​போது, மனு​தா​ரர் அளித்த புகார் விசா​ரணைக்கு எடுத்​துக்​கொள்​ளப்​பட்​டு, சென்னை மாநக​ராட்சி ஆணை​யருக்கு அனுப்​பப்​பட்​டு, அவரது விசா​ரணை​யில் உள்​ள​தாக லஞ்ச ஒழிப்​புத் துறை தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

இதை பதிவுசெய்த நீதிப​தி, “2 வாரங்​களில் விசா​ரணையை முடித்​து, லஞ்ச ஒழிப்​புத் துறை​யிடம் அறிக்​கையை தாக்​கல் செய்ய வேண்​டும்” என சென்னை மாநக​ராட்சி ஆணை​யருக்கு உத்​தர​விட்​டார்.

ஆணை​யர் தாக்​கல் செய்​யும் அறிக்​கை​யில் குற்​றம் நடந்​ததற்​கான முகாந்​தரம் இருந்​தால், சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் மீது வழக்​குப்​ப​திவு செய்​து, சட்​டத்​துக்கு உட்​பட்டு நடவடிக்கை எடுக்க வேண்​டுமென லஞ்ச ஒழிப்​புத் துறைக்கு நீதிபதி உத்​தர​விட்​டுள்​ளார்​.

SCROLL FOR NEXT