தமிழகம்

அண்ணா சாலையில் பைக்கில் சென்றபோது தகராறு: வழக்கறிஞரை தாக்கிய போலீஸார் மீது புகார்

செய்திப்பிரிவு

சென்னை: வழக்​கறிஞர் மீது தாக்​குதல் நடத்​திய, காவலர்​கள் மீது காவல் நிலை​யத்​தில் புகார் அளிக்​கப்​பட்​டுள்​ளது. சென்னை சிந்​தா​திரிப்​பேட்டை காவல் நிலை​யத்​தில் சட்​டம் - ஒழுங்கு பிரி​வில் காவலர்​களாக பணி​யாற்றி வருபவர்​கள் சதீஷ்கு​மார் (32), அக்​பர் (38).

இரு​வரும் நேற்று முன்​தினம் இரவு பைக்​கில் அண்ணா சாலை மீரான் சாகிப் தெரு வழி​யாக சென்று கொண்​டிருந்​தனர். அப்​போது காவலர் சதீஷ்கு​மார் திடீரென பிரேக் பிடித்​த​தால் பைக் நிலை​தடு​மாறி முன்​னால் தோழி​யுடன் சென்று கொண்​டிருந்த சென்னை உயர் நீதி​மன்ற வழக்​கறிஞர் கிரிதரன் (25) பைக் மீது மோதி​யுள்​ளது.

இதில் இரு தரப்​பினருக்​கும் இடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்​டுள்​ளது. இந்த சம்​பவத்தை கிரிதரன் செல்​போனில் படம் பிடித்​துள்​ளார். இதனால் ஆத்​திரமடைந்த போலீ​ஸார் இரு​வரும் கிரிதரனை சரமாரி​யாக தாக்​கியதோடு, போனை​யும் பிடுங்கி உடைத்​துள்​ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த 20-க்​கும் மேற்​பட்ட வழக்​கறிஞர்​கள் சம்பவ இடத்​தில் திரண்​ட​தால் பதற்​ற​மான சூழல் நில​வியது.

அறிக்கை அளிக்க உத்தரவு

இதைக் கேள்​விப்​பட்டு இரவு ரோந்து பணியி​லிருந்த மத்​திய குற்​றப்​பிரிவு உதவி ஆணை​யர் சீனி​வாசன் சம்பவ இடம் விரைந்து இரு தரப்​பினரை​யும் சமா​தானம் செய்​தார்.

தாக்​குதல் மற்​றும் தகராறு தொடர்​பாக உரிய நடவடிக்கை எடுப்​ப​தாக உறு​தி​யளித்​ததை அடுத்​து, வழக்​கறிஞர் கிரிதரன், அவருக்கு ஆதர​வாக வந்த வழக்​கறிஞர்​கள் அங்​கிருந்து கலைந்து சென்​றனர்.

தகராறில் ஈடு​பட்ட காவலர்​கள் இரு​வரும் மது போதை​யில் இருந்​த​தாக​வும், அவர்​கள் ஓட்டி வந்த பைக்​கின் நம்​பர் பிளேட் எண் சரி​யாக இல்லை என்​றும் கூறப்​படு​கிறது. இந்த விவ​காரம் தொடர்​பாக சிந்​தா​திரிப்​பேட்டை போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

குற்​றச்​சாட்​டுக்கு உள்​ளான போலீ​ஸார் குறித்து விரைந்து விசா​ரித்து அறிக்கை அளிக்க உயர் போலீஸ் அதி​காரி​கள் உத்​தர​விட்​டுள்​ளனர். அதை அடிப்​படை​யாக வைத்து சம்​பந்​தப்​பட்ட போலீ​ஸார் மீது துறை ரீதியி​லான நடவடிக்​கை எடுக்​கப்​பட உள்​ள​தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT