மு.வீரபாண்டியன்

 
தமிழகம்

பெரியார், அம்பேத்கர் பெயர் நீக்கம்: அரசு விளக்க கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: பெரி​யார், அம்​பேத்​கர், நேரு பெயர்​கள் பிற்​படுத்​தப்​பட்​டோர் நலத்​துறை​யின் கொள்கை விளக்க குறிப்​பில் இருந்து நீக்​கப்​பட்​டது குறித்து அரசு விளக்​கம் அளிக்க வேண்​டும் என இந்​திய கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: பிற்​படுத்​தப்​பட்​டோர் நலத்​துறை கொள்கை விளக்​கக் குறிப்​பேட்​டில், இடஒதுக்​கீடு, சமூகநீதி வரலாற்​றைக் கூறும் பகு​தி​யில் இடம்​பெற்​றிருந்த பெரி​யார், அம்​பேத்​கர் மற்​றும் ஜவஹர்​லால் நேரு​வின் பெயர்​கள் நீக்​கப்​பட்டு இருந்​ததற்கு கடும் கண்​டனங்​கள் எழுந்​தன. இதையடுத்து அத்​தலை​வர்​களின் பெயர்​கள் குறிப்​பேட்​டில் சேர்க்​கப்​படும் என அமைச்​சர் வி.சம்​பத்​கு​மார் தெரி​வித்​துள்​ளார். ஆனால், இதற்​குக் காரண​மானவர்​கள் யார் என்ற கேள்விக்கு விடை அளிக்​கப்​பட​வில்​லை.

பெரி​யார், அம்​பேத்​கர், ஜவஹர்​லால் நேரு ஆகியோர் மதச்​சார்​பின்மை கொள்​கை​யில் உறு​தி​யாக நின்​றவர்​கள். பிற்​போக்​குத் தனங்​களை, இந்​துத்​துவ மதவெறி அரசி​யலை, வகுப்​பு​வாதத்தை வாழ்​நாள் முழு​வதும் எதிர்த்து போராடிய​வர்​கள். அப்​படிப்​பட்ட தலை​வர்​களின் பெயர்​கள் பிற்​படுத்​தப்​பட்​டோர் நலத்​துறை கொள்கை விளக்​கக் குறிப்​பேட்​டிலிருந்து நீக்​கப்​பட்​டதை தற்​செய​லான​தாக, சாதாரண ஒரு தவறாக பார்க்க முடி​யாது.

அதை ஒரு திட்​ட​மிட்​டச் செய​லாகவே கருதவேண்​டி​யுள்​ளது. இத்​தலை​வர்​களின் பெயர்​கள் இந்​துத்​துவா சக்​தி​களுக்​கும், மத அடிப்​படை வாதி​களுக்​கும், பிற்​போக்​குச் சக்​தி​களுக்​கும் எப்​போதுமே எட்​டிக்​காய் போன்று கசக்​கும்.

எனவே, இத்​தலை​வர்​கள் பெயர்​கள் ஏன் நீக்​கப்​பட்​டன? இந்த நீக்​கத்​துக்​குப் பின்​னால் உள்ள சக்​தி​கள் எவை? என்​பது குறித்து தமிழக அரசு முழு​மை​யான விசா​ரணை நடத்தி விளக்​கமளிக்க வேண்​டும். பெயர் நீக்​கத்​துக்கு காரண​மானவர்​களை கண்​டறிந்து அவர்​கள் மீது கடுமை​யான நடவடிக்கை எடுக்​கவேண்​டும் என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT