தமிழகம்

​டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கை முதல்வர் தீர்க்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: டாஸ்மாக் பணி​யாளர்​கள் கோரிக்​கை​களில் தமிழக முதல்​வர் தலை​யிட்டு தீர்வு காண வேண்​டும் என்று இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி மாநிலச் செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து,அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: பாது​காப்​பற்ற பணிச் சூழலால் ஆயிரக்​கணக்​கான டாஸ்மாக் பணி​யாளர்​கள் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர்.

          

பணிநிரந்​தரம், கால​முறை ஊதி​யம், ஓய்​வூ​தி​யம் உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி 10 ஆண்​டு​களுக்​கும் மேலாக தொடர்ந்து முறை​யிட்​டும், போராடி​யும் வரு​கின்​றனர்.

சில்​லறை மது​பான விற்​பனை​யின் மூலம் டாஸ்மாக் நிறு​வனம், தமிழக அரசுக்கு வரி வரு​மானத்​தில் மூன்​றில் ஒரு பங்​களிப்பு வழங்​கு​கிறது. இந்​நிலை​யில், ஊழியர்​களின் கோரிக்​கைகள் தொடர்​பாக தமிழ்​நாடு டாஸ்மாக் பணி​யாளர் சங்​கம் (ஏஐடியூசி) கடந்த ஆண்டு பிப்​.11 முதல் தொடர்ந்து போராடு​கிறது.

இக்​கால கட்​டத்​தில் மது​விலக்கு மற்​றும் ஆயத்​தீர்​வைத் துறை அமைச்​சர், அரசின் கூடு​தல் செய​லா​ளர் உள்​ளிட்ட உயர் அலு​வலர்​களிடம் பல சுற்று பேச்​சு​வார்த்தை நடத்​தி​யும் தீர்வு காணப்​ப​டாத நிலை​யில் இன்று (3-ம் தேதி) முதல் கால​வரையற்ற காத்​திருப்பு இயக்​கத்தை அறி​வித்​துள்​ளனர். வேலை நிறுத்​தம் உள்​ளிட்ட போராட்​டங்​களும் அறிவிக்​கப்​பட்​டுள்​ளன.

நீண்​ட​கால பணித் தொடர்ச்​சி​யுடன் பணிபுரிந்து வரும் டாஸ்மாக் பணி​யாளர்​களின் பணிநிரந்​தரம், கால​முறை ஊதி​யம், ஓய்​வூ​தி​யம் உள்​ளிட்ட கோரிக்​கைகள் மிக, மிக நியாய​மானவை என்​பதை தமிழக முதல்​வரின் கவனத்​துக்கு தெரி​வித்​து, டாஸ்மாக் பணி​யாளர்​கள் கோரிக்​கைகள் மீது நேரடி​யாக தலை​யிட்டு நிறைவேற்​றித் தர வேண்​டும். இவ்​வாறு ​ அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT