தமிழகம்

சென்னையில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் தடையின்றி குடிநீர் கிடைப்பதை ஆய்வு செய்ய குழு

Guest Author

சென்னை: சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் உள்ள நகர்​புற வாழ்​விட மேம்​பாட்டு வாரிய குடி​யிருப்​பு​களில் வசிக்​கும் மக்​களுக்கு தங்கு தடை​யின்றி குடிநீர் கிடைக்​கும் வகை​யில், 5 பேர் கொண்ட சிறப்பு குழு ஆய்வு மேற்​கொண்டு வரு​வ​தாக வீட்​டு​வசதித் துறை செயலர் கிர்​லோஷ் குமார் தெரி​வித்​தார்.

தமிழ்​நாடு நகர்ப்​புற வாழ்​விட மேம்​பாட்டு வாரிய குடி​யிருப்பு மூலம், சென்​னை​யில் வீடு​கள் இல்​லாமல் தெரு​வோரங்​களில் வசித்​தவர்​கள், கூவம் ஆற்று ஓரங்​களில் வீடு கட்டி தங்​கி​யிருந்​தவர்​கள், ஆக்​கிரமிப்பு இடங்​களில் வீடு கட்​டி​யிருந்​தவர்​கள் என பலருக்​கும் கடந்த 10 ஆண்​டு​களுக்கு முன்​பு, எண்​ணூர், வியாசர்​பாடி, பட்​டினப்​பாக்​கம், சேத்​துப்​பட்​டு, கண்​ணகி நகர், எழில் நகர், செம்​மஞ்​சேரி, கொட்​டி​வாக்​கம், அயப்​பாக்​கம் உள்​ளிட்ட 207 திட்​டப் பகு​தி​களில் 1 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட குடி​யிருப்​பு​கள் கட்​டப்​பட்டு பொது​மக்​களுக்கு ஒப்​படைக்​கப்​பட்​டன.

இக்​குடி​யிருப்​பு​களில், லட்​சக்​கணக்​கானோர் வசித்து வரும் நிலை​யில், இங்கு குடிநீர் வாரி​யத்​தால் வழங்​கப்​படும் நீர் போது​மான அளவுக்கு இல்லை என அவ்​வ​போது பொது​மக்​கள் குற்​றம்​சாட்டி வந்​தனர். அண்​மை​யில் கூட கண்​ணகி நகர் மற்​றும் எழில் நகர் சுனாமி குடி​யிருப்பு பகு​தி​களில் இந்த பிரச்​சினை​கள் பெரு​மள​வில் எழுந்​தன.

குறிப்​பாக, குடிநீர் வாரி​யத்​தால் தண்​ணீர் தொட்​டிகளில் இரண்டு நாட்​களுக்கு ஒரு முறை மட்​டுமே தண்​ணீர் நிரப்​பப்படு​வ​தால் குடிக்க மற்​றும் குளிக்க உள்​ளிட்​ட​வற்​றுக்கு கூட தண்​ணீர் கிடைப்​ப​தில்லை என அப்​பகுதி மக்​கள் புகார் தெரி​வித்​தனர்.

இதனையடுத்து நகர்ப்​புற வாழ்​விட மேம்​பாட்டு வாரி​யம் மற்​றும் வீட்​டு​வசதி துறை அமைச்​சர் ராஜ்கு​மார் உத்​தர​வின்​படி, அதி​கப்​படி​யான கொள்​ளளவு கொண்ட குடிநீர் தொட்டி கண்​ணகி நகர், எழில் நகர் பகு​தி​களுக்கு தனித்​தனி​யாக கட்​டும் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன.

தற்​போது, சென்னை, புறநகர் பகு​தி​களில் உள்ள குடி​யிருப்​பு​களில் தண்​ணீர் தட்​டு​பாடின்றி கிடைக்​கும் வகை​யில் சென்​னை​யில் உள்ள அனைத்து நகர்​புற வாழ்​விட மேம்​பாட்டு வாரிய குடி​யிருப்​பு​களை​யும் ஆய்வு செய்ய குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்​து, வீட்​டு​வசதி மற்​றும் நகர்ப்​புற வளர்ச்​சித் துறை செயலர் கிர்​லோஷ் குமார் கூறிய​தாவது: சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் நகர்ப்​புற வாழ்​விட மேம்​பாட்டு வாரிய குடி​யிருப்​பு​களில் வசிக்​கும் மக்​களுக்கு தேவை​யான குடிநீர், கழிப்​பிடம் உள்​ளிட்ட அடிப்​படை வசதி​களை மேம்​படுத்​தும் வகை​யில் நேரடி​யாக கள ஆய்வு நடத்தி வரு​கிறோம்.

குறிப்​பாக, அங்கு வசிக்​கும் மக்​களுக்கு தங்கு தடை​யின்றி குடிநீர் விநி​யோகிக்​கும் வகை​யில் நடவடிக்கை மேற்​கொள்​ளும் வித​மாக நகர்​புற வாழ்​விட மேம்​பாட்டு வாரி​யம், சென்னை குடிநீர் வாரி​யம், மாநக​ராட்சி மண்டல அலு​வலர் உள்​ளிட்ட 5 பேர் கொண்ட குழு ஆய்​வு​களை செய்து வரு​கின்​றது.

தற்​போது வரை ஒக்​கி​யம் துரைப்​பாக்​கம், செம்​மஞ்​சேரி உள்​ளிட்ட பகு​தி​களில் ஆய்​வு​கள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன. மேலும், அனைத்து இடங்​களி​லும் இந்த குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்​கல் செய்ய உள்​ளது. இதன் மூலம், அப்​பகு​தி​களில் வசிக்​கும் மக்​களுக்கு தேவை​யான வசதி​களை​யும் செய்து கொடுக்​கப்​படும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

அதே​போல் கண்​ணகி நகர், எழில் நகரில் நடை​பெற்று வரும் பணி​கள் குறித்​து, சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்​குநர் த.ஆனந்த் கூறிய​தாவது: சென்னை குடிநீர் வாரி​யம் சார்​பில் எழில் நகர் குடி​யிருப்பு பகு​தி​யில் 10 லட்​சம் லிட்​டர் கீழ்​நிலை குடிநீர் சேகரிப்பு தொட்டி கட்​டப்​பட்டு வரு​கிறது.

மேலும்​,பம்பு செட்​டு​களை மறுசீரமைக்​கும் பணி​களும் நடை​பெற்று வரு​கிறது. இப்​பணி​களை விரைந்து முடிக்க அதி​காரி​களுக்கு அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

கண்​ணகி நகரை பொறுத்​தவரை 38 லட்​சம் லிட்​டர் மேல்​நிலை குடி நீர் சேகரிப்பு தொட்​டி​யும், 24 லட்​சம் லிட்​டர் கீழ்​நிலை குடிநீர் சேகரிப்பு தொட்​டி​யும் அமைக்​கும் பணி தீவிர​மாக நடை​பெற்று வரு​கிறது.

இந்த பணி​கள் செப்​டம்​பரில் முடிவடைந்து மக்​கள் பயன்​பாட்​டிற்கு குடிநீர் தொட்​டிகள் கொண்டு வரப்​படும். இதனால், அங்கு வசிக்​கும் லட்​சக்​கணக்​கான குடும்​பத்​தினர் குடிநீர் பற்​றாக்​குறை​யின்​றி பயன்​பெறு​வர். இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

- மணிகண்டன் ஆறுமுகம்

SCROLL FOR NEXT