தமிழகம்

சென்னையில் வணிக சிலிண்டர் ரூ.2,983 ஆக உயர்வு: ஓட்டலில் உணவு விலை ஏற வாய்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: சென்​னை​யில் வணிக பயன்​பாட்​டுக்​கான காஸ் சிலிண்​டர் விலை ரூ.66.50 உயர்ந்​து, ரூ.2,983 விலை நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

பொதுத்​துறையைச் சேர்ந்த இந்​தி​யன் ஆயில் நிறு​வனம், பாரத் பெட்​ரோலி​யம் நிறு​வனம், ஹிந்​துஸ்​தான் பெட்​ரோலி​யம் நிறு​வனம் ஆகிய எண்​ணெய் நிறு​வனங்​கள், வீடு​களுக்கு 14.2 கிலோ எடை​யிலும், வணிக பயன்​பாட்​டுக்கு ரூ.19 கிலோ எடை​யிலும் சமையல் காஸ் சிலிண்​டர்​களை விநி​யோகம் செய்​கின்​றன.

இந்​நிறு​வனங்​கள், சர்​வ​தேச சந்​தை​யில் நில​வும் கச்சா எண்​ணெய் விலைக்கு ஏற்ப மாற்​றம் செய்​கின்​றன, அந்த வகை​யில், நாடு முழு​வதும் உள்ள முக்​கிய நகரங்​களில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்​பாட்​டுக்​கான சிலிண்​டர் விலை உயர்த்​தப்​பட்​டுள்​ளது. சென்​னை​யில் 19 கிலோ எடை கொண்ட சிலிண்​டர் ரூ.66.50 உயர்ந்​து, ரூ.2,983-க்கு விற்​பனை செய்​யப்​படு​கிறது.

அதாவது,ரூ.2,916.50-லிருந்து ரூ.2,983 ஆக அதி​கரித்​துள்​ளது. இந்​தி​யா​வில் பண்​டிகைக் காலம் தொடங்​க​வுள்ள நிலை​யில், இப்​பு​திய விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்​தது. தற்​போதைய வணிக ரீதி​யான காஸ் சிலிண்​டர் விலை உயர்​வால் உணவகங்​கள், ஹோட்​டல்​களில் உணவு​கள் விலை ஏற வாய்ப்​பு உள்​ளது.

SCROLL FOR NEXT