தமிழகம்

கோவை குண்டுவெடிப்பு கைதி அன்சாரிக்கு 60 நாள் பரோல்

செய்திப்பிரிவு

கோவை: கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் அல் உம்மா இயக்கத்தின் நிர்வாகியாக இருந்த முகமது அன்சாரி மற்றும் முகமது அலி, முகமது ஆஜம், மோனப்பா, நவாப்கான் ஆகியோர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையி்ல், முகமது அன்சாரியின் நெருங்கிய உறவினர் உடல்நலக்குறைவால் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக முகமது அன்சாரி உள்பட 5 பேருக்கும் 60 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT