முதல்வர் விஜய்

 
தமிழகம்

வேட்புமனுவில் சொத்து விவரம் மறைப்பா? - உயர் நீதிமன்றத்தில் முதல்வர் விஜய் தரப்பு மறுப்பு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து விவரங்களை முழுமையாக தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டில் எந்த அடிப்படையும் இல்லை என்று முதல்வர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது.

பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது தேர்தல் வெற்றியை எதிர்த்து வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் மற்றும் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் ஆகியோர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளை நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீதான இறுதி விசாரணையை நீதிபதி வி.லட்சுமி நாராயணன் துவங்கியுள்ளார்.

முதல்வர் விஜய் தரப்பில், உச்ச நீதிமன்ற தீர்ப்புகள், சட்ட ஆணைய பரிந்துரைகள் ஆகியவற்றை சுட்டிக்காட்டி வாதிட்ட வழக்கறிஞர், வேட்புமனுவில் விஜய் தனது சொத்து விவரங்களை தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளில் எந்த அடிப்படியும் இல்லை என்று வாதிட்டார்.

அவரது வாதம் முடிவடையாததை அடுத்து, தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரிய முதல்வர் விஜய்யின் மனுக்களின் விசாரணையை நீதிபதி நாளைக்கு தள்ளிவைத்துள்ளார்.

SCROLL FOR NEXT