தமிழகம்

‘நல்லா போயிட்டு இருக்கு சார்...’ - புதுவை ரங்கசாமியிடம் முதல்வர் விஜய் உற்சாகம்

பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து உரையாடல்

செய்திப்பிரிவு

புதுச்சேரி: புதுச்​சேரி முதல்​வர் ரங்​க​சாமிக்கு தமிழக முதல்​வர் விஜய் பிறந்​த​நாள் வாழ்த்து தெரி​வித்​தார். அப்​போது, இரு​வருக்​கும் நடந்த உரை​யாடலின்​போது ‘நல்லா போயிட்டு இருக்கு சார்’ என்று விஜய் தெரி​வித்​தார்.

புதுச்​சேரி முதல்​வர் ரங்​க​சாமிக்​கும் தமிழக முதல்​வர் விஜய்க்​கும் நெருங்​கிய நட்பு உண்​டு. விஜய் தமிழக வெற்​றிக் கழகத்​தைத் தொடங்​கி, முதல் மாநாடு நடத்​திய போதே, முதல்​வர் ரங்​க​சாமி வாழ்த்து தெரி​வித்​தார். அந்த மாநாட்டை தொலைக்​காட்சி வழி​யாக பார்த்​து, அந்​தப் படத்தை ஊடகங்​களுக்கு அனுப்​பி​னார். தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யில் ரங்​க​சாமி இருந்​தா​லும் முதல்​வர் விஜய்​யுடன் தொடர்ந்து நெருக்​கம் காட்டி வரு​கிறார்.

இந்​நிலை​யில், புதுச்​சேரி முதல்​வர் ரங்​க​சாமி​யின் பிறந்​த​நாள் நேற்று கொண்​டாடப்​பட்​டது. பிரதமர் மோடி, பல மாநில முதல்​வர்​கள், துணைநிலை ஆளுநர் கைலாஷ்​நாதன் உள்​ளிட்​டோர் வாழ்த்து தெரி​வித்​தனர். தமிழக அமைச்​சர் புஸ்ஸி ஆனந்த் சென்​னை​யில் இருந்து போனில் வாழ்த்து தெரி​வித்து விட்​டு, தமிழக முதல்​வர் விஜய் வாழ்த்து தெரி​விப்​ப​தாக குறிப்​பிட்​டார். அதையடுத்து முதல்​வர் விஜய் புதுச்​சேரி முதல்​வர் ரங்​க​சாமிக்கு வாழ்த்து தெரி​வித்​துப் பேசினார்.

அப்​போது, ரங்​க​சாமி, “நன்​றி, நல்லா போய்ட்டு இருக்​கா” என்று கேட்​டார். அதற்கு தமிழக முதல்​வர் விஜய், “நல்லா போயிட்டு இருக்கு சார்” என்​றார்.

உடனே முதல்​வர் ரங்​க​சாமி, “நல்லா பண்​ணுங்க; நேரில் வந்து பார்க்​கிறேன்.. நல்லா இருங்க” என்​றார். அதற்கு விஜய், ‘சரிங்க சார்’ என்று குறிப்​பிட்​டார். இரு மாநில முதல்வர்களும் உற்சாகமாக உரையாடிக் கொண்டதாக கட்சி வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

SCROLL FOR NEXT