தமிழகம்

லண்​டனில் இருந்து மீட்​கப்​பட்ட திரு​மங்கை ஆழ்​வார் சிலையை பார்வையிட்ட முதல்வர்

மீட்டுக் கொண்டுவந்த அதிகாரிகளுக்கு பாராட்டு

செய்திப்பிரிவு

சென்னை: லண்​டனில் இருந்து மீட்​கப்​பட்ட திரு​மங்கை ஆழ்​வார் வெண்​கலச் சிலையை முதல்​வர் விஜய் நேரில் பார்​வை​யிட்​டு, மீட்​டுக் கொண்டு வந்த அதி​காரி​களுக்கு பாராட்டு தெரி​வித்​தார்.

தஞ்​சாவூர் மாவட்​டம் கும்​பகோணம் சவுந்​தர​ராஜப் பெரு​மாள் கோயி​லில் கடந்த 1957 முதல் 1967-ம் ஆண்​டுக்கு இடைப்​பட்ட காலத்​தில் திரு​மங்கை ஆழ்​வார் வெண்​கலச் சிலை​யும் காளிங்க நர்த்​தனர் கிருஷ்ணர், விஷ்ணு மற்​றும் தே​வி​யின் உலோகச் சிலைகளும் திருடு​ போ​யின. இது தொடர்​பாக தமிழக சிலைத் திருட்​டுத் தடுப்​புப் பிரிவு காவல் துறை​யினர் தீவிர விசா​ரணை மேற்​கொண்​டனர்.

விசா​ரணை​யில், திரு​மங்கை ஆழ்​வார் சிலை லண்​டனில் உள்ள ஆக்​ஸ்​போர்டு பல்​கலைக்​கழகத்​தின் ஆஷ்மோலியன் அருங்​காட்​சி​யகத்​தில் இருப்​பது உறுதி செய்​யப்​பட்​டது. திரு​மங்கை ஆழ்​வார் சிலை​யின் பூர்​வீகம் குறித்த அறி​வியல் பூர்​வ​மான ஆதா​ரங்​களை​யும், புகைப்பட சான்​றுகளை​யும் சிலைத் திருட்​டுத் தடுப்​புப் பிரிவு அதி​காரி​கள் திரட்​டினர்.

இந்த ஆதா​ரங்​கள் மத்​திய உள்​துறை, வெளி​யுறவுத்​துறை மற்​றும் இந்​திய தொல்​லியல் துறை மூல​மாக இங்​கிலாந்து அரசுக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டன. ஆதா​ரங்​களின் உண்​மைத்​தன்​மையை ஏற்ற ஆக்​ஸ்​போர்டு பல்​கலைக்​கழகம், சிலையை மீண்​டும் இந்​தி​யா​விடம் ஒப்​படைக்க சம்​ம​தித்​தது. இதையடுத்து தூதரக ரீதியி​லான நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்​டு, கடந்த 16-ம் தேதி இச்​சிலை தமிழகத்​துக்கு பாது​காப்​பாகக் கொண்டு வரப்​பட்​டது.

தலை​மைச் செயல​கத்​தில், காவல்​துறை தலைமை இயக்​குநர் மகேஷ் குமார் அகர்​வால், கூடு​தல் காவல்​துறை இயக்​குநர் (சிலைத் திருட்​டுத் தடுப்​புப் பிரிவு) டி.கல்​பனா நாயக் ஆகியோர் மீட்​கப்​பட்ட சிலையை நேற்று முன்தினம் முதல்​வர் விஜய்​யிடம் காண்​பித்​தனர். அரிய கலைப் ​படைப்பை மீட்​டுக் கொண்டு வந்த அதி​காரி​களின் சிறப்​பான பணியை முதல்​வர் பாராட்​டி​னார். அவர்​களுக்கு தனது வாழ்த்​துகளை தெரி​வித்​துக் கொண்​டார்.

மீட்​கப்​பட்​டுள்ள திரு​மங்கை ஆழ்​வார் சிலை நேற்று மாலை கும்​பகோணம் சவுந்​தர​ராஜப் பெரு​மாள் கோயிலுக்கு கொண்டு வரப்​பட்​டது. இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணை​யர் அஸ்​வினி, செயல் அலு​வலர் சுரேந்​திர ராஜா ஆகியோர் பெற்​றுக் கொண்​டனர். தொடர்ந்து கி​ராம மக்​கள் சிலையை ஊர்​வலமாக எடுத்​துச் சென்​றனர். பின்​னர் அந்த சிலை கோயி​லின் பாது​காப்பு அறை​யில் வைத்து பூட்​டப்​பட்​டது.

SCROLL FOR NEXT