தமிழகம்

“பெரியார் கொள்கைகள் வழிகாட்டுதலுடன் வெற்றித் தமிழகம்...” - முதல்வர் விஜய்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசியலின் முன்னோடிகளில் ஒருவரான பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் விஜய் வாழ்த்து வெளியிட்டுள்ளார். அவரது வாழ்த்துக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

“சுயமரியாதையும், சமூகநீதியும், பகுத்தறிவும் நிறைந்த முற்போக்குச் சிந்தனைகளை மக்கள் மனங்களில் விதைத்து, சாதி, மத வேறுபாடுகளைக் களைந்திடவும், மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும் தம் வாழ்நாள் முழுவதும் போராடிய பெரியாரின் பிறந்தநாளில், அவரது புரட்சிகரமான சிந்தனைகளையும், கொள்கைகளையும் பெருமையுடன் நினைவுகூர்ந்து வணங்குகிறேன்.

பெரியாரின் கொள்கைத் தடத்தில் பயணித்து, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற முழக்கத்தின்படி, சம வாய்ப்புகளால் அனைவரும் வளம்பெற்று, சுயமரியாதை மிளிரும் தமிழ்நாட்டை உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்!

பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தலைமுறைதோறும் தழைத்தோங்கட்டும்! வெற்றித் தமிழகத்தை உருவாக்கும் பயணத்தில் அவரது கொள்கைகள் நமக்கு வழிகாட்டட்டும்” என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT