ஆசிய விளையாட்டு போட்டியில் பெருமை சேர்ப்பார்களா தமிழக வீரர், வீராங்கனைகள்?

35 பேர் பங்கேற்கின்றனர்
ஆசிய விளையாட்டு போட்டியில் பெருமை சேர்ப்பார்களா தமிழக வீரர், வீராங்கனைகள்?
Updated on
2 min read

20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணங்களில் வரும் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை நடைபெற உள்ளன. ஆசிய விளையாட்டு போட்டியை ஜப்பான் நடத்துவது இது 3-வது முறையாகும். இதற்கு முன்னர் 1958-ல் டோக்கியோவிலும், 1994-ல் ஹிரோஷிமாவிலும் ஆசிய விளையாட்டு போட்டிகளை ஜப்பான் நடத்தியிருந்தது.

2026-ம் ஆண்டுக்கான இந்த விளையாட்டுப் போட்டிகள் நகோயா மற்றும் ஐச்சி மாகாணங்களில் நடைபெறுகின்றன. தொடக்க மற்றும் நிறைவு விழாக்கள் இரண்டும் பாலோமா மிசுஹோ மைதானத்தில் கோலாகலமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

இந்தியாவில் இருந்து மும்முறை 267 வீரர்கள், 234 வீராங்கனைகள் என 501 பேர் ஆசிய விளையாட்டில் பங்கேற்கின்றனர். இந்திய அணி 36 வகையிலான விளையாட்டுகளில் கலந்துகொள்கிறது.

ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் தமிழகத்தை 21 வீரர்கள், 14 வீராங்கனைகள் என 35 பேர் இடம் பெற்றுள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர் பதக்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்ப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தமிழக வீரர், வீராங்கனைகளின் விவரம்:

தடகளம்: பிரவீன் சித்திரவேல் (ஆடவர் மும்முறை தாண்டுதல்), ஆதர்ஷ் ராம் (ஆடவர் உயரம் தாண்டுதல்), விஷால் தென்னரசு (ஆடவர் 400 மீ, 4x400 மீ ரிலே), ராஜேஷ் ரமேஷ் (ஆடவர் 400 மீ, ஆடவர் 4x400 மீ ரிலே), சந்தோஷ் குமார் தமிழரசன் (ஆடவர் 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டம்), வித்யா ராம்ராஜ் (மகளிர் 400 மீ தடை ஓட்டம், 4x400 மீ ரிலே), நந்தினி கொங்கன் (மகளிர் 100 மீ தடை தாண்டுதல் ஓட்டம்), பரணிகா இளங்கோவன் (மகளிர் போல்வால்ட்), கிருஷ்ணா ஜெயசங்கர் மேனன் (மகளிர் குண்டு எறிதல்), கவுதமி ஜெயராமன் (மகளிர் 800 மீ), அபிநயா ராஜராஜன் (மகளிர் 4x100 மீ ரிலே).

பாட்மிண்டன்: ஹரிஹரன் அம்சகருணன் (ஆடவர் இரட்டையர், அணிகள் பிரிவு)

கிரிக்கெட்: வாஷிங்டன் சுந்தர் (ஆடவர் கிரிக்கெட்), கமலினி (மகளிர் கிரிக்கெட்).

வாள்வீச்சு: கிஷோ நிதி (ஆடவருக்கான சேபர் தனிநபர் பிரிவு, ஆடவருக்கான சேபர் அணிகள் பிரிவு), பவானி தேவி (மகளிருக்கான சேபர் தனிநபர் பிரிவு, மகளிருக்கான சேபர் அணிகள் பிரிவு), ஜெபர்லின் ஜானி (மகளிருக்கான சேபர் அணிகள் பிரிவு), ஜாய்ஸ் அஷிதா ஸ்டாலின்ராஜ் (மகளிருக்கான ஃபாயில் தனிநபர், மகளிருக்கான ஃபாயில் அணி)

பாய்மரப்படகு: நேத்ரா குமணன் ( மகளிருக்கான பாய்மரப் படகு))

ஸ்குவாஷ்: அபய் சிங் (ஆடவர் ஒற்றையர், ஆடவர் அணி), வேலவன் செந்தில்குமார் (கலப்பு இரட்டையர், ஆடவர் அணி), ஜோஷ்னா சின்னப்பா (கலப்பு இரட்டையர், மகளிர் அணி), ஷமீனா ரியாஸ் (கலப்பு இரட்டையர், மகளிர் அணி).

அலைச்சறுக்கு: கிஷோர் குமார் (ஆடவர் ஷார்ட்போர்டு), கமலி மூர்த்தி (மகளிர் ஷார்ட்போர்டு)

டேபிள் டென்னிஸ்: சத்தியன் ஞானசேகரன் (ஆடவர் இரட்டையர், அணிகள் பிரிவு).

டென்னிஸ்: தட்சிணேஸ்வர் சுரேஷ் (ஆடவர் இரட்டையர்), என்.ராம் பாலாஜி (ஆடவர் இரட்டையர்).

வாலிபால்: முத்துசாமி, ஜெரோம் வினித், ஜோயல் பெஞ்சமின், ஓம் வசந்த்.

நீச்சல்: பெனடிக்சன் ரோஹித் பெனிஸ்டன் மாணிக்கராஜ் (50 மீட்டர் பட்டர்பிளை, 100 மீட்டர் பட்டர்பிளை, 100 மீட்டர் ஃப்ரீஸ்டைல், 4x100 ஃப்ரீஸ்டைல் ரிலே, 4x100 மீட்டர் மெட்லி ரிலே, தனுஷ் சுரேஷ்: (50 மீட்டர் பிரீஸ்ட்ஸ்டிரோக், 100 மீட்டர் பிரீஸ்ட்ஸ்டிரோக், 4x100 மீட்டர் மெட்லி ரிலே).

ஆசிய விளையாட்டு போட்டியில் பெருமை சேர்ப்பார்களா தமிழக வீரர், வீராங்கனைகள்?
மே.இ.தீவுகளுக்கு எதிரான தொடர்: நமன் திர், அகிப் நபிக்கு வாய்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in