தமிழகம்

அமைதியும், பாதுகாப்பும் நிறைந்த உன்னத தமிழகம் உருவாக்குவோம்: முதல்வர் விஜய் காவலர் தின வாழ்த்து

செய்திப்பிரிவு

சென்னை: அமை​தி​யும், பாது​காப்​பும் நிறைந்த உன்னத தமிழகத்தை உரு​வாக்​கு​வோம் என்று காவலர் தின வாழ்த்​துச் செய்​தி​யில் முதல்​வர் விஜய் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: கடந்த 1859-ம் ஆண்டு மெட்​ராஸ் மாவட்ட காவல் சட்​டத்தை நிறைவேற்​றி, நவீன, அமைப்பு ரீதி​யான காவல் துறை தோற்​று​விக்​கப்​பட்ட நாளை நினை​வு​கூரும் வகை​யில் செப்​.6-ம் தேதி (நேற்​று) காவலர் தினம் கொண்​டாடப்​படு​கிறது.

சமூகத்​தில் அமைதி நில​வ​வும், சட்​டத்​தின் ஆட்சி நிலைபெறவும் தன்​னலமின்றி பணி​யாற்​றிவரும் காவல் துறை​யினர் அனை​வருக்​கும் எனது நெஞ்​சம் நிறைந்த காவலர் தின நல்​வாழ்த்​துகள்.

குற்​றங்​களைத் தடுத்​து, சட்​டம் - ஒழுங்​கைப் பேணுவதுடன், ஆபத்​தான சூழல்​கள், பேரிடர் காலங்​களில் மக்​களின் உயிர், உடைமை, உரிமை​களைப் பாது​காப்​ப​தி​லும் துணிவுடன் நின்று களப்​பணி ஆற்​றிவரும் காவல் துறை​யினரின் வீர​மும், தியாக​மும் போற்​றத்​தக்​கவை.

காவல் துறை​யினரின் பணிச்சுமை​யைக் குறைத்​து, நவீன தொழில்​நுட்ப வசதி​களு​டன் அவர்​களது பணித் திறனை மேம்​படுத்​தி, காவலர்​களுக்​கும், அவர்​களது குடும்​பங்​களுக்​கும் தேவை​யான நலத்​திட்​டங்​களை உறு​தி​செய்​வதற்​கும் அரசு முன்​னுரிமை அளிக்​கும்.

மக்​களும், காவல் துறை​யுடன் கரம் சேர்த்​து, நம்​பிக்​கை, நல்​லிணக்​கத்​துடன் பயணித்​து, அமை​தி​யும், பாது​காப்​பும் நிறைந்த உன்னத தமிழகத்தை உரு​வாக்க, இந்த நாளில் உறு​தி​யேற்​போம். இவ்​வாறு முதல்​வர்​ தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT