தமிழகம்

என்எல்சி நிறுவன பங்குகளை விற்பதை மறுபரிசீலனை செய்யுங்கள்: பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்

செய்திப்பிரிவு

சென்னை: நெய்​வேலி பழுப்பு நிலக்​கரி நிறு​வனத்​தில் (என்​.எல்​.சி.) மத்​திய அரசின் பங்​கு​களை விற்​பனை செய்ய முடிவு செய்​திருப்​பதை மறு​பரிசீலனை செய்ய வேண்​டும் என்று பிரதமர் நரேந்​திர மோடிக்கு முதல்​வர் விஜய் கடிதம் எழு​தி​யுள்​ளார்.

இதுகுறித்து அக்​கடிதத்​தில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: என்​.எல்​.சி. இந்​தியா நிறு​வனத்​தின் செலுத்​தப்​பட்ட பங்கு மூலதனத்​தை, 2 சதவீதம் அடிப்​படை பங்​கு​கள் மற்​றும் 1 சதவீதம் கூடு​தல் பங்​கு​கள் ஒதுக்​கீட்டு விருப்​பம் உட்பட 3 சதவீதம் வரையி​லான பங்​கு​களை 'விற்​பனைக்​கான சலுகை' மூலம் விற்​பனை செய்​வதற்கு மத்​திய அரசு எடுத்​துள்ள முடிவு குறித்து தமிழக அரசின் வருத்​தத்தை தெரிவிக்க இக்​கடிதம் எழுதுகிறேன்.

மேலும், என்​.எல்​.சி இந்​தியா நிறு​வனத்​தில் மத்​திய அரசின் பங்​கு​களை மேலும் குறைக்​கும் எந்​தவொரு முடிவை​யும், தமிழக அரசு கொள்கை ரீதி​யாக ஆட்​சேபிக்​கிறது. இவ்​விவ​காரம் தமிழகத்​துக்கு மிக முக்​கி​யத்​து​வம் வாய்ந்​தது.

என்​.எல்​.சி இந்​தியா நிறு​வனம், மாநில அரசு நிர்​வாகத்​தின் விரி​வான வசதி வாய்ப்​பு​கள், உள்​கட்​டமைப்பு மேம்​பாடு, மறு​வாழ்வு நடவடிக்​கைகள் மட்​டுமல்​லாது, தமிழக மக்​களின் ஒத்​துழைப்​புடன், மாநில அரசு வாயி​லாகக் கையகப்​படுத்​தப்​பட்ட நிலங்​களில் பல தசாப்​தங்​களாகக் கட்​டமைக்​கப்​பட்​டுள்​ளது. இத்​தகைய முக்​கி​யத்​து​வம் வாய்ந்த பொதுத்​துறை நிறு​வனத்​தில் மாநில அரசுக்கு நியாய​மான மற்​றும் நீடித்த உரிமை உள்​ளது.

மேலும், என்​.எல்​.சி இந்​தியா நிறு​வனம் என்​பது எரிசக்தி பாது​காப்​பு, கனிமவள மேம்​பாடு மற்​றும் முக்​கிய உள்​கட்​டமைப்பு ஆகிய​வற்​றில் ஈடு​பட்​டுள்ள முக்​கி​யத்​து​வம் வாய்ந்த தேசிய சொத்து என்​ப​தில் தமிழக அரசு உறு​தி​யாக உள்​ளது. மத்​திய அரசின் பங்​கு​களை மேலும் குறைப்​பது, அது எவ்​வளவு குறை​வாக இருப்​பினும், இது​போன்ற முக்​கி​யத்​து​வம் வாய்ந்த பொதுத்​துறை நிறு​வனங்​களின் பொது உடைமைத் தன்​மைக்கு ஒரு தவறான முன்​னு​தா​ரணத்தை ஏற்​படுத்​தி​விடும். இத்​தகைய நடவடிக்கை நிதி சார்ந்த அம்​சங்​களைக் கடந்​து, மாநிலத்​தின், மாநில மக்​களின் நீண்​ட​கால நலன்​கள், நாட்​டின் எரிசக்​திப் பாது​காப்பு ஆகிய​வற்​றைப் பாதிப்​ப​தாக அமை​யும்.

மேலும், என்​.எல்​.சி இந்​தியா நிறு​வனத்​தில் மத்​திய அரசின் பங்​கு​கள் மேலும் குறைக்​கப்​படக் கூடாது என்​ப​தில் தமிழக அரசு தொடர்ந்து உறு​தி​யாக இருந்​து​வரு​கிறது. இத்​தகைய பொதுத்​துறை நிறு​வனங்​கள், தொடர்ந்து முழு​மை​யாக அரசின் உரிமை​யிலும் கட்​டுப்​பாட்​டிலும் மட்​டுமே நீடிக்​க

வேண்​டும். இத்​தகைய சூழலில், என்​.எல்​.சி இந்​தியா நிறு​வனத்​தின் பங்​கு​களை விற்​பனை செய்​வது தொடர்​பான தனது முடிவை மத்​திய அரசு மறு​பரிசீலனை செய்​ய​வேண்​டும்.

மேலும், தமிழ்​நாடு அரசின் எண்​ணங்​களை​யும், கொள்கை ரீதி​யான ஆட்​சேபங்​களை​யும் மத்​திய அரசு உரிய முறை​யில் பரிசீலிக்​கும் என்று உளப்​பூர்​வ​மாக நம்​பு​கிறேன்​. இவ்​வாறு கடிதத்​தில்​ அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

ஒன்றிய அரசும்... இந்திய அரசும்...

தமிழக அரசின் நடைமுறைகளில் மத்திய அரசை குறிக்க ‘மத்திய அரசு’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. 2021-ல்

திமுக ஆட்சிக்கு வந்தபின்னர் ‘மத்திய அரசு’ என்பதற்கு பதில் ‘ஒன்றிய அரசு’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த விவகாரம் அப்போது பெரும் சர்ச்சையானது. இதற்கிடையே, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெகவின் புதிய அரசு நிர்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்களை செய்துவருகிறது. அதன் ஒருபகுதியாக தற்போது ‘ஒன்றிய அரசு’ என்ற சொல்லை விடுத்து ‘இந்திய அரசு’ என தற்போது பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் எழுதியுள்ள இந்தக் கடிதத்தில் இந்தச் சொற்பிரயோக மாற்றமும் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT