தமிழகம்

‘துளி’ இலச்சினையை வெளியிட்டு மழைநீர் சேமிப்பு இயக்கத்தை தொடங்கினார் முதல்வர் விஜய்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் முழு​வதும் மழைநீர் சேமிப்பை மக்​கள் இயக்​க​மாக முன்​னெடுக்​கும் வகை​யில், ‘துளி’ இலச்​சினையை முதல்​வர் விஜய் நேற்று வெளி​யிட்டு விழிப்​புணர்வு இயக்​கத்தை தொடங்கி வைத்​தார்.

நக​ராட்சி நிர்​வாகத் துறை சார்​பில் மழைநீர் சேமிப்பு விழிப்​புணர்வு நிகழ்ச்சி சென்னை சேப்​பாக்​கத்​தில் உள்ள குடிநீர் வடிகால் வாரியத் தலை​மையகத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதில் சிறப்பு விருந்​தின​ராகக் கலந்து கொண்ட முதல்​வர் விஜய், மழைநீர் சேமிப்பு விழிப்​புணர்​வுக்​கான ‘துளி’ இலச்​சினையை வெளி​யிட்​டார். தொடர்ந்து அங்கு அமைக்​கப்​பட்​டிருந்த மழைநீர் சேகரிப்பு மாதிரி இல்​லத்​தைப் பார்​வை​யிட்​டார்.

அதன்​பின்​னர், மெரினா கடற்​கரையில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் மாநக​ராட்​சிகள், நக​ராட்​சிகள், பேரூராட்​சிகள், ஊராட்​சிகளில் விழிப்​புணர்வு ஏற்​படுத்​தும் இயக்​கத்​தைத் தொடங்கி வைத்து குறும்​படத்​தையும் பார்​வை​யிட்​டார்.

இது​குறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பில் கூறியிருப்​ப​தாவது:

தற்​போது அதி​கரித்து வரும் நீர்த் தேவை, நகரமய​மாக்​கல், மாறி வரும் மழைப்​பொழிவு, காலநிலை மாற்​றம் ஆகிய​வற்​றைக் கருத்​தில் கொண்டு, நிலத்​தடி நீர்​வளங்​களைப் பாது​காக்க மழைநீர் சேமிப்பு இயக்​கம் முன்​னெடுக்​கப்​படு​கிறது.

இதன்​படி அனைத்து மாவட்​டங்​களி​லும் அரசு அலு​வல​கங்​கள், பொதுக் கட்​டிடங்​கள், மருத்​து​வ​மனைகள், பள்​ளி​கள், அடுக்​குமாடிக் குடி​யிருப்​பு​கள், வணிகக் கட்​டிடங்​களில் உள்ள மழைநீர் சேகரிப்​புக் கட்​டமைப்​பு​கள் ஆய்வு செய்​யப்​பட்டு சீரமைக்​கப்​படும். புதிய கட்​டிடங்​கள் மட்​டுமின்றி, ஏற்​கெனவே உள்ள வீடுகள், நிறு​வனங்​கள், வணிக வளாகங்​கள், தொழிற்​சாலைகளி​லும் மழைநீர் சேகரிப்பு அமைப்​பு​களை ஏற்​படுத்த ஊக்​கு​விக்​கப்​படும்.

மழைநீர் சேகரிப்பு குறித்து உள்​ளாட்சி அலு​வலர்​கள், பொறி​யாளர்​கள், ஆசி​ரியர்​கள், மாணவர்​கள், சுய உதவிக் குழு​வினர், குடி​யிருப்​போர் நலச் சங்​கத்​தினர், தன்​னார்​வலர்​களுக்கு பயிற்​சிகள் வழங்​கப்​படும். பணிகளின் முன்​னேற்​றம் குறித்த புகைப்​படங்​கள், புவி​யிடக் குறியீடுகள் மற்​றும் இணை​ய​வழி அறிக்​கைகள் மூலம் ஆவணப்​படுத்​தப்​படும்.

குறிப்​பாக, மழைநீர் செறிவூட்​டும் அகழிகள், நீர் ஊடுரு​வும் குழிகள், செறிவூட்​டும் கிணறுகள் போன்ற அமைப்​பு​கள் நிலத்​தின் தன்​மைக்​கேற்ப உரு​வாக்​கப்​படும். மழைநீர் சேமிப்​புப் பணிகளில் சிறப்​பாகச் செயல்​படும் மாவட்​டங்​கள், உள்​ளாட்சி அமைப்​பு​கள், பள்​ளி​கள், கல்​லூரி​கள், சமூக அமைப்​பு​களுக்கு விருதுகளும் வழங்​கப்​படும்.

மேலும், வளங்​களைத் திறம்​படப் பயன்​படுத்​தவும், ஒரே பணியை மீண்​டும், மீண்​டும் மேற்​கொள்​வதைத் தவிர்க்​கவும், நடைமுறை​யில் உள்ள மற்ற நீர்​வளத் திட்​டங்​களு​டன் இந்த இயக்​கம் ஒருங்​கிணைக்​கப்​படும்.

எனவே, பொது​மக்​கள் மற்​றும் நிறு​வனத்​தினர் தங்​கள் கட்​டிடங்​களில் மழைநீர் சேகரிப்​புக் கட்​டமைப்​பு​களைச் சீரமைத்து, அரசின் இந்த முன்​னெடுப்​புக்கு உறுதுணை​யாக இருக்க வேண்​டும். இவ்​வாறு தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.

நிகழ்ச்​சி​யில் அமைச்​சர்​கள் ஆதவ் அர்​ஜுனா, ராஜ்மோகன், ரா.குமார், நெ.மரிய வில்​சன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பங்கேற்​றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT