கோப்புப் படம்

 
தமிழகம்

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்: முதல்வர் விஜய் இன்று ஆலோசனை

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் வடகிழக்கு பரு​வ​மழை அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலை​யில், அது தொடர்​பான மாவட்ட அளவில் மேற்​கொள்​ளப்​பட்​டுள்ள முன்​னேற்​பாடு நடவடிக்​கைகளை ஆய்வு செய்​யும் வித​மாக முதல்​வர் விஜய் இன்று தலை​மைச் செயல​கத்​தில் அனைத்து மாவட்ட ஆட்​சி​யர்​கள், பல்​வேறு துறை அமைச்​சர்​கள், துறை செயலர்​கள் உள்​ளிட்​டோருடன் ஆலோ​சனை நடத்​துகிறார்.

இந்த ஆண்​டு, அடுத்த மாதம் 3 அல்​லது 4-வது வாரத்​தில் வடகிழக்கு பரு​வ​மழை தொடங்​கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இந்​நிலை​யில், வடகிழக்கு பரு​வ​மழை முன்​னேற்​பாடு​கள் குறித்து அமைச்​சர்​கள், துறை செயலர்​கள் மற்​றும் அனைத்து மாவட்ட ஆட்​சி​யர்​கள், சென்னை மாநக​ராட்சி ஆணை​யர் ஆகியோ​ருடன் முதல்​வர் விஜய் தலை​மைத் செயல​கத்​தில் இன்று ஆலோ​சனை நடத்​துகிறார்.

இந்த ஆலோ​சனைக் கூட்​டத்​தில் ஏரி​கள், குளங்​கள், கால்​வாய்​கள் மற்​றும் மழைநீர் வடி​கால்​களில் தூர் வாருதல், ஆகாய தாமரைச் செடிகள் மற்​றும் ஆக்​கிரமிப்​பு​களை அகற்​று​தல், மழை வெள்​ளத்​தால் பாதிக்​கப்​படும்​போது தாழ்​வான பகு​தி​களை முன்​கூட்​டியே அடை​யாளம் காணுதல், அங்​குள்ள மக்​களை தங்க வைக்க நிவாரண முகாம்​களை ஏற்​பாடு செய்​தல், அங்கு குடிநீர், கழி​வறை, மின்​சா​ரம் உள்​ளிட்ட அடிப்​படை வசதி​களை உறுதி செய்​தல், சமையல் கூடங்​களுக்கு தேவை​யான உணவுப் பொருட்​களை இருப்பு வைத்​தல், தன்​னார்​வலர்​கள் ஒருங்​கிணைப்​பு,மீட்பு பணி​களுக்​கான தயார் நிலை, பரு​வ​மழைக்​கால நோய்​களுக்கு சிகிச்சை அளிப்​ப​தற்​கான நடவடிக்​கைகள், சிறப்பு முகாம்​களை நடத்​து​வதற்​கான தயார் நிலை, கடலோர மாவட்​டங்​களில் பரு​வ​மழை முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகள், கடலோர நகரங்​களில் மீட்பு நடவடிக்​கை​யில் மீனவர்​களை பயன்​படுத்​து​வது, போ​திய படகு​களை தயார் நிலை​யில் வைத்​தல் உள்​ளிட்​டவை குறித்து ஆலோ​சிக்​கப்பட இருப்​ப​தாக தலை​மைச்​ செயல​க வட்​டாரங்​கள்​ தெரி​வித்​துள்​ளன.

SCROLL FOR NEXT