சத்யபாமாவை தேற்றிய முதல்வர் விஜய்.
தாராபுரம்: தாராபுரம் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் மற்றும் அவதூறுகள் குறித்துப் பேசும்போது தவெக வேட்பாளர் சத்யபாமா மேடையிலேயே உணர்ச்சிவசப்பட்டுக் கண்ணீர் விட்டு அழுதார்.
அவர் பேசும்போது, “மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் நான் இங்கு வந்தேன்; நான் யாருக்கும் எந்தத் துரோகமும் செய்யவில்லை, எந்தத் தவறும் செய்யவில்லை. ஆனால் என் மீது தேவையில்லாத அவதூறுகளைச் பரப்பி வருகிறார்கள். எதிர்க்கட்சிகள் என் மீது எவ்வளவு அவதூறுகளைச் சொன்னாலும் சரி, மக்களுக்கு நல்லது நடக்கும் என்றால் அந்தப் பழிகளையும் தாங்கிக் கொள்ள தயாராக இருக்கிறேன்” என்றார். சத்யபாமா மேடையில் அழுததைக் கண்ட முதல்வர் விஜய் ஆறுதல் கூறி தேற்றினார்.