தர்மலிங்கம் லிங்கேஸ்வரன் பாலதண்டாயுதம் கார்த்திகேயன், முதல்வர் விஜய்

 
தமிழகம்

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதிகள் நியமனம்: முதல்வர் விஜய் வாழ்த்து

மு.சக்தி

சென்னை: “நீதித்துறையின் மிக உயர்ந்த மரபையும், கண்ணியத்தையும் கொண்ட சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ள கூடுதல் நீதிபதிகளின் பணி சிறக்கட்டும்,” என முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “மாண்பமை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதிகளாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தர்மலிங்கம் லிங்கேஸ்வரன், பாலதண்டாயுதம் கார்த்திகேயன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

நீதியின் மாண்பையும், அரசியலமைப்பின் விழுமியங்களையும் பாதுகாக்கும் வகையில், நீதித்துறையின் மிக உயர்ந்த மரபையும், கண்ணியத்தையும் கொண்ட சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ள தங்களின் பணி சிறக்கட்டும்” என்று முதல்வர் விஜய் கூறியுள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT