சென்னை: தமிழக முன்னாள் தலைமைச் செயலர் சுகவனேஸ்வர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 82.
தமிழக அரசின் பல்வேறு முக்கிய துறைகளில் தலைமைப் பொறுப்பு வகித்தவர். 2002-ல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின்போது தலைமைச் செயலராக சுகவனேஸ்வர் 175 நாட்கள் இருந்தார். அதன் பின்னர் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் தலைவராக பணியாற்றி 2004-ல் ஓய்வு பெற்றார்.
மறைந்த சுகவனேஸ்வருக்கு மனைவி உமா, மகன் சிவ பிரசாத், மகள் சிவ கிருபா ஆகியோர் உள்ளனர். சுகவனேஸ்வர் மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
‘பல முக்கிய பொறுப்புகளை வகித்து திறம்படப் பணியாற்றிய சுகவனேஸ்வரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.