தமிழக முதல்​வர் விஜய்​யை, இந்​திய தொழில் கூட்​டமைப்​பின் (சிஐஐ) தென் மண்​டலத்தலை​வர் பி.ர​விந்​திரன், தமிழக தலை​வர் சி.தேவ​ராஜன், துணைத் தலை​வர் ஜெ.​முரு​கவேல், முன்​னாள் தலை​வர் எம்​.பொன்​னு​சாமி உள்​ளிட்ட நிர்​வாகி​கள் நேற்று சந்​தித்​தனர்.

 
தமிழகம்

தமிழகத்தில் முதலீடுகளை மேற்கொள்ள தொழில் நிறுவனங்களுக்கு முதல்வர் வேண்டு​கோள்

தொழில் விரி​வாக்​கத் திட்​டங்​களுக்கு ஒத்​துழைப்பு வழங்​கு​வ​தாக உறுதி

செய்திப்பிரிவு

சென்னை: இந்​திய தொழில் கூட்​டமைப்பு (சிஐஐ) மற்​றும் பிஎம்​டபிள்​யூ, யமஹா உள்​ளிட்ட மோட்​டார் வாகன நிறு​வனங்​களின் உயர் அதி​காரி​களு​டன் முதல்​வர் விஜய் ஆலோ​சனை நடத்​தி​னார்.

தமிழகத்​தில் தொடர்ந்து முதலீடு​களை மேற்​கொள்​ளு​மாறு கேட்​டுக் கொண்ட முதல்​வர், அவர்​களது தொழில் விரி​வாக்​கத் திட்​டங்​களுக்கு அரசு முழு ஒத்​துழைப்பு வழங்​கும் என்று உறு​தி​யளித்​தார். தமிழக முதல்​வ​ராக விஜய் கடந்த 10-ம் தேதி பதவி​யேற்​றதை தொடர்ந்​து, சென்னை தலை​மைச் செயல​கத்​தில் நிதி, காவல், வரு​வாய், தொழில், வேளாண்மை உட்பட பல்​வேறு துறை​களின் செயல்​பாடு​கள் குறித்து உயர் அதி​காரி​களு​டன் ஆலோ​சனை நடத்தி வரு​கிறார். அந்த வகை​யில், மோட்​டார் வாகன நிறு​வனங்​களின் தலைமை செயல் அலு​வலர்​களு​டன் அவர் நேற்று ஆலோ​சனை மேற்​கொண்​டார்.

இதில், தமிழகம் மற்​றும் உலக அளவில் உள்ள பிரபல​மான நிறு​வனங்​களின் முதன்மை அலு​வலர்​கள் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர். தமிழகத்​தில் தற்​போதைய தொழில் நிறு​வனங்​களின் பங்​களிப்​பு​கள், அவற்றை பலப்​படுத்​து​வதற்​கான செயல்​பாடு​கள், மின்​வாகன உற்​பத்​தி​யின் நிலை, மாநில ஏற்​றுமதி உள்​ளிட்ட பல்​வேறு அம்​சங்​கள் குறித்து இக்​கூட்​டத்​தில் ஆலோ​சிக்​கப்​பட்​டது.

அப்​போது, தொழில் வளர்ச்​சி​யில் மோட்​டார் நிறு​வனங்​களின் பங்​களிப்பை வெகு​வாக பாராட்​டிய முதல்​வர் விஜய், அவர்​களது தொழில் விரி​வாக்​கத் திட்​டங்​களுக்கு அரசு முழு ஒத்​துழைப்பு வழங்​கும் என்​றும் உறு​தி​யளித்​தார். தமிழகத்​தில் புதிய முதலீடு செய்​வதற்​கான சாத்​தி​யக்​கூறுகள், தொழில் நிறு​வனங்​களின் தேவை​கள், எதிர்​பார்ப்​பு​கள் குறித்​தும் தொழில் நிறுவன உயர் அலு​வலர்​களு​டன் கலந்​துரை​யாடி​னார்.

குறிப்​பாக, பிஎம்​டபிள்யூ நிறு​வனத்​தின் மேலாண் இயக்​குநர் தாமஸ் டோஸ், யமஹா மோட்​டார் இந்​தியா குழு​மத்​தின் தலை​வர் ஜிம் ஆட்டா ஆகியோர் முதல்​வர் விஜய்யை தனித்​தனியே சந்​தித்து கலந்​துரை​யாடினர். தமிழகத்​தில் தொடர்ந்து முதலீடு​களை மேற்​கொள்​ளு​மாறு அவர்​களை முதல்​வர் கேட்​டுக் கொண்​டார். இந்த சந்​திப்பு வாயி​லாக, ஆட்​டோமொபைல் தொடர்​பான பல்​வேறு புதிய முதலீடு​கள் தமிழகத்​துக்கு கிடைக்க வாய்ப்பு உள்​ள​தாக கூறப்​படு​கிறது.

முதல்​வர் விஜய்​யை, இந்​திய தொழில் கூட்​டமைப்​பின் (சிஐஐ) தென் மண்​டலத் தலை​வர் பி.ர​விந்​திரன், தமிழக தலை​வர் சி.தேவ​ராஜன், துணைத் தலை​வர் ஜெ.​முரு​கவேல், முன்​னாள் தலை​வர் எம்​.பொன்​னு​சாமி உள்​ளிட்ட நிர்​வாகி​கள் நேற்று சந்​தித்​தனர்.

அப்​போது, தொழில் துறை வளர்ச்​சி, முதலீட்டு ஊக்​கு​விப்​பு, கொள்கை ரீதி​யான பங்​களிப்பு ஆகிய​வற்​றில் தமிழக அரசுடன் சிஐஐ நீண்ட காலம் கொண்​டுள்ள கூட்​டாண்மை குறித்​தும், தொழில் தொடங்​கு​வதை எளி​தாக்​கு​வதற்​கான நடவடிக்​கைகள், மாநிலத்​தின் நிலை​யான பொருளா​தா​ரம், தொழில் வளர்ச்​சிக்​கான முன்​னெடுப்​பு​கள் குறித்​தும் விரி​வாக ஆலோ​சிக்​கப்​பட்​டது. சிஐஐ நிர்​வாகி​களின் கோரிக்​கைகளை கேட்​டுக் கொண்ட முதல்​வர், அவற்றை பரிசீலித்து நடவடிக்கை எடுப்​ப​தாக உறுதி அளித்​துள்​ள​தாக கூறப்​படு​கிறது.

வேளாண் துறை ஆய்​வுக் கூட்​டம்: மேட்​டூர் உள்​ளிட்ட முக்​கிய அணை​களின் நீர் இருப்​பு, குறுவை நெல் சாகுபடி குறித்து வேளாண்​மை, நீர்​வளத் துறை​யின் ஆய்​வுக் கூட்​ட​மும் முதல்​வர் விஜய் தலை​மை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் தலை​மைச் செயலர் எம்​.​சாய்​கு​மார், வேளாண்மை துறை செயலர் வ.தட்​சிணா​மூர்த்​தி, நீர்​வளத் துறை செயலர் ஜெ.ஜெய​காந்​தன் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர். டெல்டா மாவட்​டங்​களில் சாகுபடிக்​காக மேட்​டூர் அணை​யில் இருந்து தண்​ணீர் திறப்​பது, சாகுபடியை அதி​கரிப்​ப​தற்​கான நடவடிக்​கைகள், வேளாண் பட்​ஜெட் உள்​ளிட்​ட​வை தொடர்​பாக இக்​கூட்​டத்​தில்​ ஆலோ​சனை நடத்​தப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT