தமிழகம்

தமிழக அரசு ஆண் பணியாளர்களுக்கு 15 நாட்கள் தந்தையர் மகப்பேறு விடுப்பு: முதல்வர் விஜய் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசின் ஆண் பணியாளர்களுக்கு முதல் முறையாக 15 நாட்கள் தந்தையர் மகப்பேறு கால விடுப்பு அளிக்கப்படுவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

இது​குறித்து தமிழக அரசு நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக அரசில் பணிபுரியும் பெண் பணி​யாளர்​களுக்கு 365 நாட்​கள் மகப்​பேறு விடுப்பு வழங்​கப்​பட்டு வரும் நிலை​யில், அரசு ஆண் பணி​யாளர்​களுக்​கும் தந்​தையர் மகப்​பேறு கால விடுப்பு வழங்​கப் பரிசீலிக்க வேண்டு​மென்ற கோரிக்கை அரசுப் பணி​யாளர்​களிடம் இருந்து அரசுக்கு வந்​துள்​ளது.

குழந்தை பிறக்​கும் கால கட்​டம் என்​பது தாய் மற்​றும் குழந்​தைக்கு மிகவும் முக்​கிய​மானதாகும். இக்​கால கட்டத்​தில் தாய்க்கு உடல் மற்​றும் மனரீதி​யான ஆதரவு வழங்​கு​வதுடன், குழந்தை பராமரிப்​பிலும் தந்​தையின் பங்​களிப்பு அவ​சி​யமாகிறது.

பெண் அரசுப் பணி​யாளர்​களுக்கு 365 நாட்​கள் மகப்​பேறு விடுப்பு வழங்​கப்​படுவது தாய்மை மற்​றும் குழந்தை நலனுக்கு அளிக்​கப்​படும் முக்​கியத்​து​வத்தை வெளிப்​படுத்து​கிறது.

அதேபோன்று, ஆண் அரசுப் பணி​யாளர்​களுக்​கும் தந்​தையர் மகப்​பேறு கால விடுப்பு வழங்​கப்​படுவது குடும்​பப் பொறுப்​பு​களைப் பகிர்ந்து கொள்​ளவும், குழந்தை வளர்ப்​பில் தந்​தையின் பங்​களிப்பை உறுதிப்​படுத்​தவும் உதவும்.

எனவே, தமிழக அரசு இக்​கோரிக்​கையைக் கனிவுடன் பரிசீலித்து, திரு​மண​மான ஆண் அரசுப் பணி​யாளர்​களுக்கு, அவர்​தம் மனைவி​யின் மகப்​பேறு காலத்​தில் உடனிருக்க ஏது​வாக 15 நாட்​கள் ‘தந்​தையர்மகப்​பேறுகால விடுப்பு’ வழங்​கி​யும், அவ்​விடுப்​பினைக் குழந்தை பிறப்​ப​தற்கு 15 நாட்​களுக்கு முன்​பிருந்தோ அல்​லது குழந்தை பிறந்த தேதி​யில் இருந்து 6 மாதங்​களுக்​குள்​ளாகவோ எடுத்​துக் கொள்ளவும் உத்​தர​விடப்​படு​கிறது. இவ்​வாறு செய்​திக் குறிப்​பில் கூறப்​பட்​டுள்​ளது.

அரசு ஊழியர்கள் வரவேற்பு

அரசு ஆண் ஊழியர்களுக் கான மகப்பேறு விடுப்பு அறிவிப்புக்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT