தமிழகம்

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளி பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைக்கு தலா ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை

முதல்வர் விஜய் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: ஜப்​பானில் நடை​பெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டு போட்​டிகளில் வலுதூக்​குதல்​ மற்றும் பேட்மிண்டனில் வெள்​ளிப் ​ப​தக்​கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைக்கு தலா ரூ.50 லட்​சம் உயரிய ஊக்​கத்​தொகை வழங்கப்​படும் என முதல்​வர் விஜய் அறி​வித்​துள்​ளார்.

இது​தொடர்​பாக அவர் வெளி​யிட்ட சமூக வலை​தளப் பதி​வுகளில் கூறி​யிருப்​ப​தாவது: ஜப்​பானில் 5-வது பாரா ஆசிய விளை​யாட்​டுப் போட்​டிகள் நடை​பெற்று வரு​கின்​றன. இதில், பெண்​களுக்​கான வலுதூக்​குதல் போட்​டியில் 67 கிலோ எடைப் பிரி​வில் வெள்​ளிப்​ப​தக்​கம் வென்று தமிழகத்​துக்​கும், இந்​தி​யா​வுக்​கும் பெருமை சேர்த்​துள்ள வீராங்​கனை கஸ்தூரி ராஜாமணிக்கு எனது மனமார்ந்த பாராட்​டுகளை​யும், நல்​வாழ்த்​துகளை​யும் தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

அவரது சாதனையை பாராட்​டும் வகை​யில் தமிழக அரசு சார்​பில் ரூ.50 லட்​சம் உயரிய ஊக்​கத்​தொகை வழங்​கப்​படும். வீராங்​கனை கஸ்தூரி ராஜாமணி​யின் தன்​னம்​பிக்கை, அயராத உழைப்பு, விடா​முயற்சி ஆகிய​வற்​றின் மூலம் பெற்றுள்ள இம்​மகத்​தான வெற்றி, தமிழகத்​தின் இளம் பாரா விளை​யாட்டு வீரர், வீராங்​க​னைகளுக்கு புதிய உத்​வேகத்தை அளிக்கும். அவர் தொடர்ந்து பல வெற்​றிகளை பெற்று தமிழகத்​துக்​கும் இந்​தி​யா​வுக்​கும் பெருமை சேர்க்க எனது வாழ்த்​துகள். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

இதேபோல் பாரா ஆசிய விளை​யாட்​டுப் போட்​டிகளில், பேட்​மிண்​டன் விளை​யாட்​டில் ஆண்​கள் இரட்​டையர் பிரி​வில் வெள்​ளிப் பதக்​கம் வென்ற இந்​திய அணிக்​கும், அவ்​வணி​யில் இடம்​பெற்​றுள்ள தமிழக வீரர் சிவ​ராஜன் சோலைமலைக்​கும் முதல்​வர் வாழ்த்​துகளை தெரி​வித்​துள்​ளார். இது​தொடர்​பான அவரது சமூகவலைத்​தள பதிவு:

சிவ​ராஜன் சோலமலை​யின் சாதனையை பாராட்​டும் வகை​யில் தமிழக அரசின் சார்​பில ரூ.50 லட்​சம் உயரிய ஊக்​கத்​ தொகை வழங்​கப்​படும். அவரது கடின உழைப்பு, விடா​முயற்​சி​யால் இச் சாதனையைப் படைத்​துள்​ளார் அவர் மேலும் பல வெற்​றிகளை பெற்று தமிழகத்துக்கும் இந்​தி​யா​வுக்​கும் பெருமை சேர்க்க வாழ்த்​துகள். இவ்வாறு கூறியுள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT