சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் தொடர்பான தனித் தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் விஜய் பேசினார்.

 
தமிழகம்

நெல், கரும்பு கொள்முதலுக்கான ஊக்கத்தொகை உயர்வு: 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவித்தார்

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிக்கும் தனித் தீர்மானம் நிறைவேற்றம்

செய்திப்பிரிவு

சென்னை: “நெல்​, கரும்​பு கொள்​முதலுக்​கான ஊக்​கத் தொகை உயர்த்தி வழங்​கப்​படும்” என்று சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் விஜய் அறி​விப்பு வெளி​யிட்​டார். அத்​துடன், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிக்​கும் தனித் தீர்​மான​மும் பேர​வை​யில் நிறை​வேற்​றப்​பட்​டது.

சட்​டப்​பேர​வை​யில் 110-வது விதி​யின் கீழ் முதல்​வர் விஜய் நேற்று வெளி​யிட்ட அறி​விப்​பில் கூறிய​தாவது: நெல், கரும்​பு​களைப் பயி​ரிட, அறு​வடை செய்ய, விற்​பனை செய்ய விவ​சா​யிகள் தங்​களது உடல், பொருள், ஆவி அனைத்​தை​யும் செல​விட்டு வரு​கின்​ற​னர். தமி​ழ​கத்​தில் தற்​போது நிதி நிலைமை சரி​யில்​லாமல் இருந்​தா​லும், நெல், கரும்பு பயி​ரிட்​டுள்ள விவ​சா​யி​களின் நலனைப் பாது​காக்க வேண்​டும் என்று கரு​தி, தமிழக வரலாற்​றில் இல்​லாத அளவில் மாநில அரசின் நெல், கரும்​புக்​கான ஊக்​கத் தொகையை அதி​கரிக்க முடிவு செய்​துள்​ளோம்.

நெல் கொள்​முதல் பரு​வம் செப்​.1-ம் தேதி தொடங்க இருப்​ப​தால் குறைந்​த​பட்ச ஆதரவு விலை​யுடன், மாநில அரசின் ஊக்​கத் தொகை​யாக ஒரு குவிண்​டாலுக்கு சன்ன ரக நெல்​லுக்கு ரூ.289, பொது ரக நெல்​லுக்கு ரூ.159 உயர்த்தி வழங்​கப்​படும். இதன்​மூலம் விவ​சா​யி​களின் சன்ன ரக நெல் ஒரு குவிண்​டாலுக்கு ரூ.2,750, பொது ரக நெல்​லுக்கு ரூ.2,600 என விலை கிடைக்​கும்.

அதே​போல, 2025-26 கரும்பு அரவைப் பரு​வத்​தில் சர்க்​கரை ஆலை​களில் பதிவு செய்து கரும்பு வழங்​கும் விவ​சா​யிகளுக்கு மத்​திய அரசு டன் ஒன்​றுக்கு ரூ.3,290.50 விலை நிர்​ண​யம் செய்​துள்​ளது.

அதற்கு மேல் தமிழக அரசால் சிறப்பு ஊக்​கத் தொகை​யாக டன் ஒன்​றுக்கு ரூ.709.50 வழங்​கப்​படும். இதன் மூலம் விவ​சா​யிகளுக்​குக் கரும்பு டன் ஒன்​றுக்கு ரூ.4,000 விலை​யாக கிடைக்​கும். கடந்த 5 ஆண்​டு​களில் கரும்​புக்​கான சிறப்பு ஊக்​கத் தொகை ரூ.156 மட்​டுமே உயர்த்தி வழங்​கப்​பட்ட நிலை​யில், தற்​போது முதல் ஆண்​டிலேயே ரூ.360.50 உயர்த்​தப்​பட்​டுள்​ளது.

மாநில அரசு ஓர் ஆண்​டில் நெல்​லுக்​கான ஊக்​கத் தொகையைக் குவிண்​டாலுக்கு ரூ.156-க்கு மேல் உயர்த்தி வழங்​கு​வதும், கரும்​புக்​கான சிறப்பு ஊக்​கத் தொகை​யாக டன் ஒன்​றுக்கு ரூ.134-க்கு மேல் வழங்​கு​வதும் வரலாற்​றில் இதுவே முதல்​முறை. விவ​சா​யிகளை இந்த அரசு கைவி​டாது. இவ்​வாறு முதல்​வர் விஜய் தெரி​வித்​தார்.

தமிழ்த்​தாய் வாழ்த்து: தமிழ்த்​தாய் வாழ்த்து தொடர்​பாக, முதல்​வர் விஜய் நேற்று கொண்டு வந்த தனித் தீர்​மானத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: மனோன்​மணீ​யம் சுந்​தர​னார் 1891-ம் ஆண்டு எழு​திய ‘மனோன்​மணீ​யம்’ என்ற நாடக நூலின் பாயிரத்​தில் இருந்து எடுக்​கப்​பட்ட ‘தமிழ்த்​தாய் வாழ்த்​து’ 1970-ல் நவ.23-ம் தேதி முதல் அரசு விழாக்​களில் முதலில் பாடப்பட வேண்​டும் என்று அரசாணை வெளி​யிடப்​பட்டது.

அதன்​பின், கடந்த 2021, டிச.17-ம் தேதி முதல் மாநிலப் பாடலாக அங்​கீ​காரம் வழங்​கப்​பட்​டு, அனைத்து கல்வி நிறு​வனங்​கள், பல்​கலைக்​கழ​கங்​கள், அரசு அலு​வல​கங்​கள், பொதுத்​துறை நிறு​வனங்​கள் உள்​ளிட்ட பொது அமைப்​பு​களின் நிகழ்ச்​சிகளி​லும், நிகழ்ச்சி தொடங்​கு​வதற்கு முன் தமிழ்த்​தாய் வாழ்த்து கட்​டா​யம் பாடப்​படும் என்று ஆணை பிறப்​பிக்​கப்​பட்​டது.

அதன்படி தமி​ழ​கத்​தில் 1970-ம் ஆண்​டில் இருந்து அனைத்து அரசு நிகழ்ச்​சிகள், கல்வி நிறு​வனங்​களில் தமிழ்த்​தாய் வாழ்த்​துப் பாடல் முதலில் பாடப்​படு​வது பின்​பற்​றப்​பட்டு வரு​கிறது. எனவே, தமிழ்த்​தாய் வாழ்த்து என்​பது தமிழ் மொழிக்​கும், தமி​ழர் பண்​பாட்​டுக்​கும் செலுத்​தப்​படும் மரி​யாதை​யின் வெளிப்​பா​டாகும்.

இந்​திய அரசி​யலமைப்பு வழங்​கி​யுள்ள மொழி மற்​றும் பண்​பாட்டு உரிமை​களின் அடிப்​படை​யில், தமி​ழ​கத்​தின் பண்​பாட்டு அடை​யாளத்தை நிலை நிறுத்​தும் வகை​யில் அனைத்து கல்வி நிறு​வனங்​கள், பல்​கலைக்​கழ​கங்​கள், அரசு அலு​வல​கங்​கள், பொதுத்​துறை நிறு​வனங்​கள் உள்​ளிட்ட பொது அமைப்​பு​களின் நிகழ்ச்​சிகளி​லும், நிகழ்ச்சி தொடங்​கு​வதற்கு முன் தமிழ்த்​தாய் வாழ்த்து கட்​டா​யம் பாடப்பட வேண்​டும் என்று தமிழக சட்​டப்​பேரவை ஏகமன​தாக தீர்​மானிக்​கிறது.இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

தீர்​மானம் தொடர்​பாக முதல்​வர் விஜய் பேசி​ய​தாவது: தமிழ் வெறும் மொழி மட்​டுமல்ல, அது நம் உயிர், அது ஒரு பண்​பாடு, நாகரி​கம், சிந்​தனை. தமிழ்னா கெத்​து, தமிழ்னா பவர். தமிழ்த்​தாய் வாழ்த்து எந்த மொழியை​யும், மதத்​தை​யும், இனத்​தை​யும் தாழ்த்தி பேச​வில்​லை. நமக்​கு, தமி​ழின் பெரு​மை​யைச் சொல்ல திருக்​குறள் ஒன்று போதா​தா? இவ்​வளவு பெருமை கொண்ட தமிழ் மொழி​யின் ஒரு அடை​யாளம்​தான் தமிழ்த்​தாய் வாழ்த்​து.

ஒட்​டுமொத்த இந்​தி​யா​வின் பன்​முகத்​தன்​மையை உயர்த்தி பிடிக்​கும் தமிழ்த்​தாய் வாழ்த்து நம் தமி​ழ​கத்​தில் முதல் இடத்​தில்​தான் இருக்க வேண்​டும். தமிழ்த்​தாய் வாழ்த்​தின் மரி​யாதையைப் பாது​காப்​ப​தில் தவெக அரசு ஒரு​போதும் சமரசம் செய்​யவே செய்​யாது. எனவே, கட்சி வேறு​பாடு​களை மறந்து ஒன்​றிணைந்து அனை​வ​ரும் இந்த தீர்​மானத்தை நிறை​வேற்ற வேண்​டும். இவ்​வாறு முதல்​வர் விஜய் பேசி​னார்.

பின்​னர் பல்​வேறு கட்​சிகள் சார்​பில் தீர்​மானத்தை வரவேற்று பேசினர்:

பேரவைத் தலைவர் பிரபாகர்: தமிழக சட்​டப்​பேர​வை​யில் 1991-ம் ஆண்​டு, முதல் முறை​யாக தமிழ்த்​தாய் வாழ்த்து பாடி தான் பேரவை நடவடிக்​கை​களைத் தொடங்க வேண்​டும் என்ற நடை​முறையைக் கொண்டு வந்​தவர் முன்​னாள் முதல்​வர் ஜெயலலி​தா.

கோவி.செழியன் (தி​முக): முதன் முதலில் அரசாணை வெளி​யிட்டு இது​தான் தமிழ்த்​தாய் வாழ்த்து பாடல் என்று பாட வைத்த​வர் முன்​னாள் முதல்​வர் மு.கருணாநி​தி. அதன் பிறகு தமிழ்த்​தாய் வாழ்த்​தைக் கட்​டா​யம் பாட வேண்​டும் என்று அரசாணை பிறப்​பித்​தவர் முன்​னாள் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின். தமிழ்த்​தாய் வாழ்த்து பாடப்பட வேண்​டும் என்​பதை தீர்​மான​மாக நிறை​வேற்​றி​னால் மட்​டும் போதாது, சட்​ட​மாக்க வேண்​டும்.

பழனி​சாமி (அதி​முக): தமிழ் தொன்​மை​யான மொழி. அது நம் பண்​பாட்​டின் அடை​யாளம். தமிழ்த்​தாய் வாழ்த்து பாடப்பட வேண்​டும் என்​பது யாருக்​கும் எதி​ரான நடவடிக்கை இல்​லை. தமி​ழுக்​கும், தாய்​மொழிக்​கும் நாம் செலுத்​தும் மரி​யாதை என்​றார்.

மேலும், இந்​திய கம்​யூனிஸ்ட் எம்​எல்ஏ கே.​மாரி​முத்​து, மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் எம்​எல்ஏ செல்வ சுவாமி, அமைச்​சர்​கள் ராஜ் மோகன், பெ.​விஸ்​வ​நாதன், வன்னி அரசு, ஷாஜஹான், பாமக எம்​எல்ஏ சிவக்​கு​மார் ஆகி​யோ​ரும் தீர்​மானத்தை வரவேற்று பேசி​னார். பின்​னர் அனைத்​துக் கட்சி உறுப்​பினர்​களின் ஆதர​வுடன், குரல் வாக்​கெடுப்பு மூலம் தீர்​மானம் ஒருமன​தாக நிறைவேறிய​தாக பேரவைத் தலைவர் அறிவித்​தார்.

SCROLL FOR NEXT