தமிழகம்

தொகுதி மறுவரையறையை 2051 வரை தள்ளி வைக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: தொகுதி மறு​வரையறை செய்​வதை 2051-ம் ஆண்டு வரை தள்ளிவைக்​கும் வித​மாக சட்​டத் திருத்​தம் கொண்டு வரவேண்​டும் என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​தார்.

தொகுதி மறு​வரையறை மசோதா தோல்வி பெற்​றதை முன்​னிட்டு இண்​டியா கூட்​டணி கட்​சிகள் உட்பட அனைத்து எதிர்​கட்​சித் தலை​வர்​களுக்கும் நன்றி தெரி​வித்து முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வெளி​யிட்ட காணொலி​யில் பேசி​ய​தாவது: தொகுதி மறு​வரையறை எனும் கருப்பு சட்​டத்​துக்கு எதி​ரான நமது போராட்​டம் வெற்றி பெற்​றுள்​ளது. இந்த ஆபத்தை ஓராண்​டுக்கு முன்பே மாநில முதல்​வர்​கள், எதிர்க்​கட்​சித் தலை​வர்​கள் ஒருங்​கிணைப்​புக் கூட்​டம் தொடங்​கி, ஏப்​ரல் 17-ல் கருப்​புக் கொடி ஏற்​றி, மசோதா நகலை கொளுத்​தினேன்.

அதன் வெற்​றிக்​கான வெடியை திண்​டுக்​கல்​லில் கொளுத்​தினேன். தீ பரவட்​டும் என்று சொன்​னேன். அது நாடாளு​மன்​றம் வரை பற்​றிக் கொண்​டது. பழைய திமுகவை பார்க்க வேண்டி வரும் என்று எச்​சரித்​தேன். அப்​படி என்​றால் என்ன என்று கேட்​ட​வர்​களுக்​கு, இது​தான் திமுக என அழுத்​த​மாக காட்​டி​யிருக்​கிறோம்.

அனைத்து எதிர்க்​கட்​சிகளின் எம்​.பி.க்​களும் ஒன்​றாகச் சேர்ந்து நின்​ற​தால், இது சாத்​தி​ய​மாகி​இருக்​கிறது. வடக்கு, தெற்கு என நமக்​குள்ளே பிளவை ஏற்​படுத்​தி, சண்டை போட வைக்​கலாம் என நினைத்​தவர்​களுக்கு சரி​யான சம்​மட்​டியடி கிடைத்​துள்​ளது. கடந்த 12 ஆண்​டு​களில் முதல் முறை​யாக பிரதமர் மோடி கொண்டு வந்த அரசி​யலமைப்​புச் சட்​டத்​திருத்த மசோதா தோல்வி அடைந்​திருக்​கிறது. இது பாஜக இனி நாடு முழுக்​கப் பெறப்​போகும் தோல்வி​களுக்​கான தொடக்​க​மாகும்.

இதற்கு உறு​துணை​யாக இருந்த மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்​தி, காங்​கிரஸ் நாடாளு​மன்​றக் கட்​சித் தலை​வர் சோனியா காந்​தி, திரிணா​முல் காங்​கிரஸ் தலை​வர் மம்தா பானர்​ஜி, சமாஜ்​வாதி தலை​வர் அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மி கட்​சித் தலை​வர் அரவிந்த் கெஜ்ரி​வால், ராஷ்டிரிய ஜனதா தள செயல் தலை​வர் தேஜஸ்​வி, தேசி​ய​வாத காங்​கிரஸ் செயல் தலை​வர் சுப்​ரியா சுலே உள்ளிட்ட தேசிய தலை​வர்​களுக்கு எனது நன்​றிகள். இப்​போது நாம் பெற்​றிருப்​பது பாதி வெற்​றியே.

2001-ம் ஆண்​டில் செய்​தது போன்றே தற்​போதும் அடுத்த 25 ஆண்​டு​களுக்​கு, அதாவது 2051 வரை, தொகுதி எண்​ணிக்​கையை மறு​வரையறை செய்​வதைத் தள்​ளிவைக்க அரசி​யலமைப்​புச் சட்​டத் திருத்​தம் கொண்டு வரவேண்​டும். பெண்​களின் இடஒதுக்​கீட்​டுக்​காக 2023-ம் ஆண்டே நாம் ஆதரித்து நிறைவேற்​றிய சட்​டத்தை உடனே இப்​போதுள்ள உறுப்​பினர்​களின் எண்​ணிக்​கைக்கு அமல்​படுத்த வேண்​டும். அது​தான் முழு வெற்​றி​யாக அமை​யும். அதற்​காகப் போராடு​வோம்.

இந்த தொகுதி மறு​வரையறைச் சட்​டம், தமிழகத்​தின் துரோகி​கள் யார் என்​பதை அடை​யாளம் காட்​டி​யுள்​ளது. அப்​படி துரோகம் செய்த பழனி​சாமிக்கு தேர்​தலுக்கு முன்பே படு​தோல்வி கிடைத்​துள்​ளது. தமிழக மக்​களை சொந்த நாட்​டிலேயே அகதி​களாக்​கப் பார்த்த பாஜக​வுக்​கும், அதி​முக​வுக்​கும் தேர்​தலில் மறக்​கவே முடி​யாத மாபெரும்​ தோல்​வியை கொடுப்​போம்​. இவ்​வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT