தமிழகம்

மடிக்கணினி வழங்கும் திட்டம் எதிர்காலத்துக்கான முதலீடு: ‘உமாஜின்’ மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: ‘தொழில்​நுட்​பத்​தில் தமிழகம் முன்​னிலை​யில் இருக்க வேண்​டும். அந்​தவகை​யில் கல்​லூரி மாணவர்​களுக்கு வழங்​கப்​பட்ட மடிக்​கணினிகள் எதிர்​காலத்​துக்​கான முதலீடு’ என முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​தார்.

தமிழக அரசின் மின்​னணு நிறு​வன​மான எல்​காட் சார்​பில் ‘உமாஜின் தமிழ்​நாடு 2026’ தகவல் தொழில்​நுட்ப உச்சி மாநாடு, சென்னை நந்​தம்​பாக்​கத்​தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று தொடங்​கியது. 2 நாட்​கள் நடை​பெறும் இந்த மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்​டா​லின் தொடங்கி வைத்​து, அங்கு அமைக்​கப்​பட்​டிருந்த தொழில்​நுட்ப கண்​காட்சி அரங்​கு​களைப் பார்​வை​யிட்டார்.

இந்​நிகழ்​வில் முக்​கிய அங்​க​மாக இந்​தி​யா​வில் முதல்​முறை​யாக டீப்​-டெக் தொழில்​நுட்​பத்​துக்​காக மாநில அளவில் பிரத்​யேக​மாக உரு​வாக்​கப்​பட்ட ‘தமிழ்​நாடு டீப்​-டெக் ஸ்டார்ட்​அப் கொள்கை 2025-26’-ஐ முதல்​வர் வெளி​யிட்​டார். இதையடுத்து தமிழகத்​தின் தொழில் வளர்ச்​சியை மேம்​படுத்​தும் வகை​யில் பெட்​டர் கம்ப்​யூட் வொர்க்​ஸ், ஈராஸ் ஜென் ஏஐ, பேன்​டம் டிஜிட்​டல் எஃபெக்ட்​ஸ், ரீவைன் ஹெல்த்​கேர் உள்​ளிட்ட பல்​வேறு முன்​னணி நிறு​வனங்​களு​டன் புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன. இதன்​மூலம் தமிழகத்​தில் 4,250 பேருக்​குப் புதிய வேலை​வாய்ப்​பு​கள் உரு​வாக வழி​வகை செய்​யப்​பட்​டுள்​ளது.

இந்த மாநாட்​டில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பேசி​ய​தாவது: தொழில்​நுட்​பம் பொருளா​தார சக்​கரத்​தின் மைய அச்​சாக இன்​றைக்கு மாறி​யிருக்​கிறது. நாம் பாரம்​பரிய​மாக வலு​வாக இருக்​கும் சர்​வீஸ் செக்​டாரிலிருந்​து, உயர் தொழில்​நுட்​பம், புத்​தாக்​கம் மற்​றும் புதுமை மைய​மான பொருளா​தா​ரத்​துக்கு தமிழகம் நகர்ந்து வரு​கிறது. அடுத்த தலை​முறைக்​கான உலகளா​விய திறன் மையங்​களின் (ஜிசிசி) மைய​மாக சென்னை நகரம் உரு​வெடுத்து வரு​கிறது. தொழில்​நுட்​பத்தை வெறும் பொருளா​தார வளர்ச்சி கரு​வி​யாகப் பார்க்​காமல், சமூக முன்​னேற்​றத்​துக்​கான சாதன​மாக பார்ப்​பது​தான் திமுக.

தொழில்நுட்பத்துக்கு அடித்தளம்: தொழில்​நுட்​பத் துறை​யில் இந்த அளவுக்கு தமிழகம் முன்​னேறி​யிருக்​கிறது என்​றால், அதற்​கான அடித்​தளத்தை அமைத்​தவர் மறைந்த முதல்​வர் கருணாநி​தி. கொள்​கை​யில் தொடங்​கி,கல்வி நிறுவன செயல்​பாடு​கள்,நான் முதல்​வன் போன்ற திறன் மேம்​பாட்டு முயற்​சிகள், ஸ்டார்ட்​-அப் நிறு​வனங்​கள், பன்​னாட்டு முகமை​கள் வரை எல்​லாம் ஒரே பாதை​யில், ஒரே இலக்​குடன் சேர்ந்து செயல்​படு​வதே நம் வளர்ச்​சிக்​கான காரணம். இந்த மாற்​றம் ஒரு நகரத்​தில் மட்​டுமல்ல, மாநிலம் முழு​வதும் சமமாகப் பரவி​யிருக்​கிறது. பொருளா​தார வளர்ச்சி இரண்​டாம் மற்​றும்மூன்​றாம் நிலை நகரங்​களுக்​கும் விரிவுபடுத்​தப்​பட்​டுள்​ளது.

கோவை, மதுரை, திருச்​சி, திருநெல்​வேலி போன்ற நகரங்​களும், தமிழகத்​தின் வளர்ச்​சி​யில் முக்​கிய பங்​காற்றி வரு​கின்​றன. தமிழகத்​தில் இருக்​கும் 38 மாவட்​டங்​களில் 32 மாவட்​டங்​களில் இருந்து மென்​பொருள் ஏற்​றுமதி நடை​பெறுகிறது. இதை அடுத்​தகட்​டத்​துக்​குக் கொண்​டு​செல்ல வேண்​டும் என்​று​தான், ஏஐ தொழில்​நுட்​பத்​துக்​கான சந்​தாவுடன் கல்​லூரி மாணவர்​களுக்கு மடிக்​கணினிகளை வழங்​கி​யிருக்​கிறோம்.

இதை இலவசம் என்று நாங்​கள் கருத​வில்​லை. தொழில்​நுட்​பம் எல்​லோருக்​கும் சமமாக கிடைப்​ப​தற்கு எதிர்​காலத்தை நோக்​கிய முதலீ​டாக பார்க்​கி றோம். தமிழகத்​தின் இலக்​கு​கள் தெளி​வானது. புது யுகத்​தின் தொழில்​நுட்​பத்​தில் தமிழகம் முன்​னிலை​யில் இருக்க வேண்​டும். இவ்​வாறு முதல்​வர் பேசி​னார்.

இந்​நிகழ்​வில் அமைச்​சர்​கள் தா.மோ.அன்​பரசன், பழனிவேல் தியாக​ராஜன், நாடாளு​மன்ற உறுப்​பினர் டி.ஆர்​.​பாலு, தகவல் தொழில்​நுட்​பத் துறை செயலர் பிரஜேந்​திர நவ்​னீத், தமிழ்​நாடு மின்​னணு நிறு​வனத்​தின் மேலாண்மை இயக்​குநர் கே.பி.​கார்த்​தி​கேயன், தமிழ்​நாடு மின்​னாளுமை முகமை​யின் தலைமை நிர்​வாக அலு​வலர் ஆல்பி ஜான் வர்​கீஸ், தமிழ்​நாடு அரசு கேபிள் டிவி நிறு​வனத்​தின் மேலாண்மை இயக்​குநர் இரா.​வைத்​தி​நாதன், தமிழ் இணைய கல்விக் கழகத்​தின் இயக்​குநர் சோமகன், கவிஞர் மதன்​கார்க்கி உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்​.

SCROLL FOR NEXT