தமிழகம்

“மெத்தனம் வேண்டாம்... பிரச்சாரத்தை தீவிரப்படுத்துங்கள்” - நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் உத்தரவு

செய்திப்பிரிவு

சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​கான பிரச்​சா​ரங்​களை மெத்​தனமின்றி தீவிரப்​படுத்த வேண்​டுமென திமுக நிர்​வாகி​களுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

திமுக தலை​வ​ரும், முதல்​வ​ரு​மான மு.க.ஸ்​டா​லின், திமுக மற்​றும் கூட்​ட​ணிக் கட்​சி​களின் வேட்​பாளர்​களை ஆதரித்து தொடர் பிரச்​சா​ரம் செய்​து​வ​ரு​கி​றார்.

          

இந்​நிலை​யில் ஸ்டா​லின் தலை​மை​யில் தேர்​தல் பணி​கள் குறித்த ஆலோ​சனை கூட்​டம் காணொலி வாயி​லாக நேற்று நடை​பெற்​றது. இதில் மாவட்​டச் செய​லா​ளர்​கள், வேட்​பாளர்​கள், பகு​திச் செய​லா​ளர்​கள் உள்​ளிட்ட கட்சி நிர்​வாகி​கள் அனை​வ​ரும் கலந்து கொண்​டனர்.

இந்த கூட்​டத்​தில் தொகு​தி​களில் இது​வரை செய்​யப்​பட்ட பணி​கள், அடுத்து மேற்​கொள்ள வேண்​டிய செயல்​பாடு​கள், பூத் கமிட்​டி​களின் நிலையை ஆய்வு செய்​தல் உள்​ளிட்ட பல்​வேறு விவ​காரங்​கள் குறித்து விவா​திக்​கப்​பட்​டன.

அப்​போது சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்கு இன்​னும் குறைந்த கால அவகாசமே உள்​ளது. எனவே, நிர்​வாகி​கள் மெத்​தன​மாக இருக்​காமல் பிரச்​சா​ரங்​களை தீவிரப்​படுத்த வேண்​டும் என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறி​வுறுத்​தி​ய​தாகக் கூறப்​படு​கிறது. இதுதொடர்​பாக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தனது எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், ‘‘வெற்றி ஒன்றே இலக்​கு, ஓய்​வின்றி உழைக்​கும் கட்​சி​யின் செயல்​வீரர்​களுக்​குப் பாராட்​டு​கள். நேற்று இரவு கோவை​யில் முதற்​கட்ட பரப்​புரை பயணத்தை முடித்​து​விட்​டு, சென்​னைக்கு திரும்​பினேன். இன்று காலை தமி​ழ​கம் முழு​வதும் களப்​பணி​யாற்றி மக்​களின் நம்​பிக்​கையை வாக்​கு​களாக உறுதி செய்​து​வ​ரும், கட்சி நிர்​வாகி​களு​டன் உரை​யாடி அவர்​களை ஊக்​கப்​படுத்​தினேன்’’ என்று தெரி​வித்​துள்​ளார்.

திமுக​வில் அமமுக முன்​னாள் எம்​எல்​ஏக்​கள்: இதற்​கிடையே அமமுக முன்​னாள் எம்​எல்​ஏ-க்​களான சி.கோ​பால், என்​.ஜி.​பார்த்​திபன் ஆகி​யோர் தங்​கள் ஆதர​வாளர்​களு​டன் நேற்று திமுக-​வில் இணைந்​தனர். இவர்​கள் இரு​வ​ரும் டிடி​வி.​தினகரனுக்கு மிக நெருக்​க​மாக இருந்​தவர்​கள் எனவும், தேர்​தலில் போட்​டி​யிட வாய்ப்​புக் கிடைக்​காத அதிருப்​தி​யில் திமுக-​வில் இணைந்​த​தாக​வும் சொல்​லப்​படுகிறது.

SCROLL FOR NEXT