தமிழகம்

மக்களின் எதிர்கால கனவுகள், தேவைகளை அறிய ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

செய்திப்பிரிவு

திருவள்ளூர்: தமிழக அரசின் நலத் திட்​டங்​கள் குறித்த மக்​களின் கருத்​துகள், அவர்​களது எதிர்​கால கனவு​கள், தேவை​கள் குறித்து அறிந்​து​ கொள்​ளும் ‘உங்க கனவ சொல்​லுங்க’ திட்​டத்தை முதல்​வர் ஸ்டா​லின் தொடங்கி வைத்​தார்.

தமிழக அரசால் கடந்த 5 ஆண்​டு​களில் அமல்​படுத்​தப்​பட்ட பல்​வேறு நலத் திட்​டங்​களில் பயனடைந்​தவர்​களின் தரவு​கள் மற்​றும் விவரங்​களை உறு​திப்​படுத்​த​வும், அந்த திட்​டங்​களின் தற்​போதைய செயல்​பாட்டு நிலை குறித்து மக்​களின் கருத்தை அறிய​வும், மக்​களின் எதிர்​கால கனவு​கள், தேவை​களைக் கண்​டறிய​வும் அவர்​களது வசிப்​பிடங்களுக்கே சென்று அறிந்து கொள்ளும் ‘உங்க கனவ சொல்​லுங்க’ என்ற புதிய திட்​டத்​துக்கு முதல்​வர் ஸ்டா​லின் தலை​மை​யில் கடந்த 6-ம் தேதி நடை​பெற்ற அமைச்​சர​வைக் கூட்​டத்​தில் ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டது. தமிழ்​நாடு மகளிர் மேம்​பாட்டு நிறு​வனம் மூலம் இத்​திட்​டம் செயல்​படுத்​தப்பட உள்​ளது.

இந்​நிலை​யில், ஏற்​கெனவே அறி​வித்​த​படி, திரு​வள்​ளூர் மாவட்​டம் செங்​குன்​றம் அடுத்த பாடியநல்​லூரில் நேற்று காலை நடை​பெற்ற விழா​வில், ‘உங்க கனவ சொல்​லுங்க’ திட்​டத்தை முதல்​வர் ஸ்டா​லின் தொடங்கி வைத்​தார்.

திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம் உள்​ளிட்ட மாவட்​டங்​களை சேர்ந்த பெண்​கள் சிலர் நேரிலும், காணொலி வாயி​லாக​வும் பங்​கேற்​று, தங்​களுக்கு பலனளித்த அரசுத் திட்​டங்​கள் குறித்து பேசி னர். அப்போது, வீட்​டுமனை பட்டா, மினி பேருந்து வசதி, உயர்மட்ட பாலம் அமைப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர். பட்டியலின, பழங்குடி​யின மக்​களைப் போல, மிக​வும் பிற்​படுத்​தப்​பட்ட, பிற்​படுத்​தப்​பட்ட மக்​களுக்​கும் மானி​யத்​துடன் வங்​கிக் கடன் வழங்க வேண்​டும் என்​றும் கோரினர்.

இந்த கனவு​கள் நிறைவேற நடவடிக்கை எடுப்​ப​தாக முதல்​வர் உறு​தி​யளித்​தார். தொடர்ந்​து, அ​வர் பேசி​ய​தாவது: 2021 சட்​டப்​பேரவை தேர்​தலுக்கு முன்​பு, திருச்​சி​யில் நடந்த திமுக மாநாட்​டில், வளரும் வாய்ப்பு​கள் - வளமான தமிழகம் என்​பது உள்​ளிட்ட 7 வாக்​குறு​தி​களை அளித்​தேன். அதையெல்​லாம், தற்​போது நிறைவேற்றி வருகிறோம். பொருளா​தா​ரத்தை உயர்த்​து​வ​தாக கூறினேன். இன்று தமிழகம் 11.19 சதவீத வளர்ச்​சி​யுடன் நாட்​டிலேயே சிறந்த மாநில​மாக உள்​ளது.

பட்​டியலினத்​தவர், பிற்​படுத்​தப்​பட்​டோர், சிறு​பான்​மை​யினர் என அனை​வருக்​கும் பார்த்​துப் பார்த்து பல திட்​டங்​களை திமுக​வின் இந்த சமூகநீதி அரசு செயல்​படுத்தி வரு​கிறது.

தமிழகத்​துக்கு எதி​ராக மட்​டுமே செயல்​படும் பாஜக தொடர்ந்து மத்​தி​யில் ஆட்​சி​யில் இருந்து வரு​கிறது. தமிழகத்​துக்​கும், மத்​திய அரசுக்​கும் பால​மாக இருக்க வேண்​டிய ஆளுநர், சட்​டப்​பேர​வை​யில் நிறைவேற்​றும் சட்​டங்​களுக்கு முட்​டுக்​கட்டை போடு​வதையே முதல் வேலை​யாக வைத்​துள்​ளார்.

இதையெல்​லாம் மீறி, மக்​கள் எங்​களு​டன் இருப்​ப​தால், 2021 சட்​டப்​பேரவை தேர்​தலில் அளித்த 505 வாக்​குறு​தி​களில் 404 வாக்​குறு​தி​களை நிறைவேற்றி உள்​ளோம்.

மக்​களின் தேவையை உணர்ந்து திட்​டங்​களை செயல்​படுத்தி வரும் அரசிடம் மக்​கள் தங்​களது கனவு​கள், தேவை​களை சொல்ல வேண்​டும் என்​ப​தற்​காக உரு​வாக்​கப்​பட்டது தான், ‘உங்க கனவ சொல்​லுங்க’ திட்​டம். இன்று முதல் 30 நாட்​களுக்​குள் தமிழகத்​தில் உள்ள அனைத்து குடும்​பங்​களை​யும் அரசின் சார்​பில் தன்​னார்​வலர்​கள் சந்​திப்​பார்​கள். அவர்​களிடம் உங்​களின் கனவு​களை சொல்​லுங்​கள். அதை அவர்​கள் டிஜிட்​டல் முறை​யில் பதிவு செய்​து​கொள்​வார்​கள். அதை ஆய்வு செய்​து, தமிழகத்​துக்​கான ஒரு மாபெரும் கனவுத் திட்​டத்தை அறிவிக்​கப் போகிறேன். 2030-ம் ஆண்​டுக்​கான தொலைநோக்​குப் பார்வை கொண்​ட​தாக அந்த திட்​டம் இருக்​கும்.

இந்த கனவு​களை எல்​லாம் நான் நிறைவேற்​றிக் காட்​டும்​போது, கிராமப்​புற, நகர்ப்​புற உள்​ கட்​டமைப்​பு​கள், மொழி, பண்​பாட்டு வெற்​றிகள், கல்​வி, திறன் மேம்​பாடு, சமூக வளர்ச்​சி, விவசா​யம், மீன்​பிடித் தொழில், வேலை​வாய்ப்​பு, தொழிற்​சாலைகள் ஆகிய 7 துறை​களில் தன்​னிறைவு பெற்ற மாநில​மாக தமிழகம் வளர்ந்​திருக்​கும்.

‘‘மக்​களிடம் செல். அவர்​களோடு வாழ். அவர்​களை நேசி. அவர்​களிடம் இருந்து கற்​றுக்​கொள். அவர்​களுக்​குத் தெரிந்​த​தில் இருந்து தொடங்​கு. அவர்​களிடம் இருப்​ப​தில் இருந்து கட்​டு​மானம் செய். பணி முடிந்த பிறகு அவர்​களுக்கு திருப்​தியை ஏற்​படுத்​தி​விட்​டுத் திரும்பி வா’’ என்றார் முன்​னாள் முதல்​வர் அண்​ணா. அவர் சொன்​னதை எல்​லாம், என் இதயத்​தில் வைத்து செயல்​படக் கூடிய​வன் நான்.

அதனால்​தான், தமிழகத்​தில் ஒரு கட்​சி​யின் ஆட்​சி​யாக இல்​லாமல், ஒரு இனத்​தின் ஆட்​சி​யாக, திரா​விட மாடல் ஆட்​சியை நடத்​திக் கொண்​டிருக்​கிறோம்.

ஆட்சி என்​பது முதல்​வ​ரான எனது கனவு​களை மட்​டுமல்ல, மக்​கள் எல்​லோருடைய கனவு​களை​யும் நிறைவேற்​று​வதற்​கான கரு​வி. மக்​களின் கனவு​கள் நிறைவேறி​னால், தமிழகம் முன்​னேறும். வளர்ச்சி அடை​யும்.

‘சுயமரி​யாதை, சமத்​து​வம், பகுத்​தறிவு மிக்​க​தாக தமிழ்ச் சமூகம் தலைநிமிர வேண்​டும். சமூகநீதி நிலைபெற வேண்​டும். ஒடுக்​கப்​பட்​டோரின் குரல்​கள் கேட்​கப்பட வேண்​டும். எல்​லோருக்​கு​மான ஆட்சி அமைய வேண்டும்’ என்று தந்தை பெரி​யார், முன்​னாள் முதல்​வர்​கள் அண்​ணா, கருணாநிதி ஆகியோர் கனவு கண்டனர். அதனால்​தான் இன்று தமிழகம் எந்த ஆதிக்​கத்​துக்​கும் தலைகுனி​யாமல், வெல்​வோம் ஒன்​றாக என்​று, மண், மொழி, மானம் காக்க நிமிர்ந்து நிற்​கிறது.

இப்​போது நாம் அடுத்​தகட்ட கனவை காண வேண்​டிய நேரம். மக்​களின் கனவு​களை, கோரிக்​கைகளை திட்​டங்​களாக உரு​வாக்​கி, மக்​கள் எண்​ணங்​களுக்கு உரு​வம் கொடுப்​பேன். தமிழகத்தை தலைசிறந்த மாநில​மாக உயர்த்​து​வேன். இது​தான் முத்​து​வேல் கருணாநிதி ஸ்டா​லின் 2026 சட்​டப்​பேரவை தேர்​தலுக்கு தரக்​கூடிய வாக்​குறு​தி. இவ்​வாறு முதல்​வர் பேசி​னார்.

இந்த நிகழ்​வில், அமைச்​சர் நாசர், எம்​.பி.க்​கள், மாதவரம் எஸ்​.சுதர்​சனம் உள்ளிட்ட எம்​எல்​ஏக்​கள்​, தலை​மைச்​ செயலர்​ முரு​கானந்​தம்​, வரு​வாய்த்​ துறை செயலர்​ அமு​தா, திரு​வள்​ளூர்​ மாவட்​ட ஆட்​சி​யர்​ பிர​தாப்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

SCROLL FOR NEXT