தமிழகம்

ரூ.3,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

டெக்ஸ்டர்

சென்னை: ரூ.3,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆலந்தூரில் தொடங்கி வைத்தார்.

பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாட 2 கோடியே 22 லட்சத்து 91,710 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வாழும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியற்றுடன் ரூ.3,000 ரொக்கத்துடன் சேர்த்து வழங்கும் பணியை சென்னை ஆலந்தூரில் இன்று (வியாழக்கிழமை) காலை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், தலைமைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மற்ற மாவட்டங்களில் ரொக்கப் பணம் ரூ.3,000, பொங்கல் பொருள்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு அமைச்சர்கள் வழங்கி பணியை இன்று தொடங்கி வைக்கின்றனர். பொங்கல் தொகுப்புடன் விலையில்லா வேட்டி, சேலைகளும் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் வழங்கப்படுகிறது. 

முன்னதாக இதற்கான டோக்கன் விநியோகம் கடந்த திங்கள் அன்று தொடங்கியது. நியாயவிலைக் கடைபணியாளர்கள் வீடு வீடாகச் சென்று டோக்கன் விநியோகித்தனர். இதுதவிர, கடைகளுக்குப் பொருட்கள் வாங்க வருவோரிடமும் டோக்கன்கள் வழங்கினர்.

SCROLL FOR NEXT