தமிழகம்

கொருக்குப்பேட்டையில் ரூ.96 கோடியில் புதிய மேம்பாலம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

செய்திப்பிரிவு

சென்னை: ​கொருக்​குப்​பேட்டை மணலி சாலை​யில் ரூ.96.04 கோடி​யில் புதி​தாக கட்​டப்​பட்ட ரயில்வே மேம்​பாலத்தை திறந்​து​வைத்த முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், ரூ.75 கோடி​யில் கட்​டப்​பட​வுள்ள மேம்​பாலத்​துக்கு அடிக்​கல் நாட்​டி​னார்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக் ​குறிப்​பு: போக்​கு​வரத்து நெரிசல் மிகுந்த கொருக்​குப்​பேட்​டை, மணலி சாலை மற்​றும் எண்​ணூர் நெடுஞ்​சாலை​யில் உள்ள ரயில்வே 2பி மற்​றும் 2ஏ சந்​திப்​பு​களின் வழி​யாக நாள்​தோறும் சுமார் 42 ஆயிரம் வாக​னங்​கள் கடந்து செல்​கின்​றன.

          

ரயில் போக்​கு​வரத்​துக்கு ஏது​வாக இவற்றை அவ்​வப்​போது நிறுத்தி அனுப்ப வேண்​டிய நிலை ஏற்​படு​கிறது. இதனால் இவ்​விரு சந்​திப்​பு​களை கனரக வாக​னங்​களும், பொது​மக்​களும் கடப்​ப​தற்கு கால​தாமத​மாகிறது.

இதன் காரண​மாக, மணலி சாலை,எண்​ணூர் நெடுஞ்​சாலை​யில் மேம்​பாலங்​கள் அமைக்க திட்​ட​மிடப்​பட்​டு, நகராட்சி நிர்​வாகத் துறை மானியக் கோரிக்​கை​யில் அறிவிக்​கப்​பட்​டது. அதன்​படி, கொருக்​குப்​பேட்​டை, மணலி சாலை​யில் ரயில்வே 2பி சந்​திப்​பில் ரூ.96.04 கோடி​யில் புதிய பாலம் கட்​டப்​பட்​டது.

இந்த பாலத்தை முதல்​வர் ஸ்டா​லின் நேற்று திறந்து வைத்​து, வாக​னத்​தில் பயணித்​தார். பின்​னர், தண்​டை​யார்​பேட்டை மண்​டலம், கொருக்​குப்​பேட்​டை, எண்​ணூர் நெடுஞ்​சாலை​யில் ரயில்வே 2ஏ சந்​திப்​பில், ரூ.75 கோடி​யில் புதிய மேம்பாலம் அமைக்​கும் பணிக்கு முதல்​வர் அடிக்​கல் நாட்​டி​னார்.

மேலும், கொருக்​குப்​பேட்டை மணலி சாலை​யில் புதிய பாலத்​துக்கு அரு​கில் ரூ.1.10 கோடி​யில் அமைக்​கப்பட உள்ள பூங்கா​வுக்​கும் அடிக்​கல் நாட்​டி​னார். இப்​பூங்கா பசுமைத் தாவரங்​கள், சுற்​றி​லும் நடைப்​ ப​யிற்​சிக்​கான பாதை, இருக்​கைகள், மின்​விளக்​கு​கள் உள்​ளிட்ட வசதி​களு​டன் அமைக்​கப்​படு​கிறது.

இந்​நிகழ்​வில், அமைச்​சர்​கள் கே.என்​.நேரு, பி.கே.சேகர்​பாபு, மேயர் ஆர்​.பிரி​யா, நகராட்சி நிர்​வாகத் துறை செயலர் தா.​கார்த்​தி​கேயன், மாநக​ராட்சி ஆணை​யர் ஜெ.குமரகுருபரன், சென்னை குடிநீர் வாரி​யத்​தின் மேலாண்மை இயக்​குநர் டி.ஜி.​வினய் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்​.

SCROLL FOR NEXT