தேவிபாலியம்மன் மற்றும் இளங்காளியம்மன் கோயில் சார்பில் கொளத்தூர், ராஜாஜி நகரில் ரூ.11.88 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மூத்த குடிமக்கள் உறைவிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஸ், மேயர் பிரியா, டாக்டர் கலாநிதி வீராசாமி எம்.பி. டி.வி.எஸ். குழுமத்தின் தலைவர் வேணு சீனிவாசன், துறை செயலாளர் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பி.என்.தர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 
தமிழகம்

ரூ.34 கோடி செலவில் 11 முதல்வர் படைப்பகங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறத்து வைத்தார்

செய்திப்பிரிவு

சென்னை: சிஎம்​டிஏ மற்​றும் சென்னை மாநக​ராட்சி சார்​பில் ரூ.33.85 கோடி செல​வில் 11 முதல்​வர் படைப்​பகங்​கள் மற்​றும் நவீன நூல​கங்​களை மாணவர்​கள், பொது​மக்​கள் பயன்​பாட்​டுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் திறந்து வைத்​தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தி.நகர் சட்​டப்​பேர​வைத் தொகு​தி, அசோக் நகரில் சென்​னைப் பெருநகர் வளர்ச்​சிக் குழு​மம் (சிஎம்​டிஏ) சார்​பில் ரூ.12.74 கோடி​யில் கட்​டப்​பட்​டுள்ள முதல்​வர் படைப்​பகம் மற்​றும் நவீன நூல​கத்தை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று திறந்து வைத்​தார்.

          

மேலும் அசோக் நகர் முதல்​வர் படைப்​பகத்​திலிருந்து காணொலிக் காட்சி வாயி​லாக ரூ.16.87 கோடி செல​வில் சிஎம்​டிஏ சார்​பில் அமைக்​கப்​பட்ட 9 முதல்​வர் படைப்​பகங்​கள் கொண்ட நவீன நூல​கங்​கள் மற்​றும் சென்னை மாநக​ராட்சி சார்​பில் ரூ.4.24 கோடி​யில் முதல்​வர் படைப்​பகம் கொண்ட நவீன நூல​கம் ஆகிய​வற்​றை​யும் திறந்​து​வைத்​து, மாணவர்​கள், பொது​மக்​கள் பயன்​பாட்​டுக்கு அர்ப்​பணித்​தார்.

சென்னை மாநக​ராட்சி சார்​பில் ரூ.10 கோடியே 95 லட்​சத்து 70 ஆயிரம் செல​வில் கட்​டப்​பட்​டுள்ள முதல்​வர் விளை​யாட்​டரங்​கம், சென்னை நடுநிலைப் பள்​ளிக் கட்​டிடம் மற்​றும் டாக்​டர் அம்​பேத்​கர் கூட்​டுறவு பண்​டகச்​சாலை நியாய விலைக் கடைகள் ஆகிய​வற்​றை​யும் முதல்​வர் திறந்​து​வைத்​தார்.

புதி​தாக திறந்து வைக்​கப்​பட்​டுள்ள நியாய விலைக் கடைகள் மூலம் மொத்​தம் 2,311 குடும்​பங்​கள் பயனடை​யும் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

மேலும் கொளத்​தூர் தொகு​திக்கு உட்​பட்ட வில்​லி​வாக்​கம், தேவி​பாலி​யம்​மன் மற்​றும் இளங்​காளி​யம்​மன் கோயில் சார்​பில் ரூ.11.88 கோடி செல​வில் கொளத்​தூர் ராஜாஜி நகரில் 25,500 சதுரடி பரப்​பில் 75 மூத்​தக் குடிமக்​கள் பயன்​பெறும் வகை​யில் கட்​டப்​பட்​டுள்ள மூத்த குடிமக்​கள் உறை​விடத்தை முதல்​வர் திறந்​து​வைத்து பார்​வை​யிட்​டார்.

மூத்த குடிமக்​களிடம் அவர்​களுக்கு செய்​யப்​பட்​டுள்ள வசதி​கள் குறித்து கேட்​டறிந்​தார். நிகழ்​வு​களில், அமைச்​சர்​கள் பி.கே.சேகர்​பாபு, அன்​பில் மகேஸ்​, மேயர்​ ஆர்​.பிரி​யா உள்​ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT