தமிழகம்

இபிஎஸ் டெல்லி பயணம் குறித்து முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்: கருணாநிதி பயணத்தை சுட்டிக்காட்டி அதிமுக பதில்

செய்திப்பிரிவு

சென்னை: அ​தி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி​யின் டெல்லி பயணத்தை முதல்​வர் ஸ்டாலின் விமர்​சித்த நிலை​யில், முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யின் டெல்லி பயணத்தை சுட்​டிக்​காட்​டி, அதி​முக ​ ஐடி பிரிவு பதில் கொடுத்​துள்​ளது.

அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி நேற்று முன்​தினம் டெல்லி சென்​று, என்​டிஏ கூட்​ட​ணி​யில் தொகு​திப் பங்​கீடு குறித்து உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவுடன் ஆலோ​சனை நடத்​தி​னார்.

          

இதை விமர்​சித்து முதல்​வர் ஸ்டாலின் நேற்று தனது சமூக வலை​தளப் பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: எதிர்க்​கட்​சித் தலை​வரும், சகாக்​களும் டெல்​லி​யில் இருப்​பது எதற்​காக? தமிழகத்​துக்கு வழங்​கப்​ப​டா​மல் வஞ்​சிக்​கப்​படும் நிதியை வாங்​கித் தரு​வதற்​கா? தமிழகத்​தில் நிறைவேற்​றப்​ப​டா​மல் முடக்​கப்​பட்ட திட்​டங்​களை நிறைவேற்ற வேண்​டும் என்று வலி​யுறுத்​த​வா? சிலிண்​டர் தட்​டுப்​பாட்​டைப் போக்​க​வா? இல்​லை.

தேர்​தல் களத்​தைச் சந்​திக்​கவே டெல்​லி​யின் சம்​மதம் வேண்​டும் என்​கிற நிலை​யில் உள்​ளவர்​களின் கையில் தமிழகம் சிக்​கி​னால், ஒவ்​வொரு நாளும் என்ன பாடுபட வேண்​டி​யிருக்​கும்.

சுயநலனுக்​காக சொந்​தக் கட்​சியை அடமானம் வைத்​தது​போல, தமிழகத்​தை​யும் டெல்​லி​யிடம் அடகு வைக்​கத் தயங்​காதவர்​கள் அவர்​கள். இவ்​வாறு முதல்​வர் தெரி​வித்​துள்​ளார்.

இதற்கு பதில் தரும் வித​மாக, அதி​முக தகவல் தொழில்​நுட்ப பிரிவு வெளி​யிட்ட பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: டெல்​லிக்கு சென்று கூட்​டணி பேசுகின்​றனர் என்று புலம்​பு​கிறார் ஸ்டாலின்.

2011 தேர்​தலுக்​காக நீங்​களும், உங்​கள் தந்தை கருணாநி​தி​யும் டெல்​லி​யில் காங்​கிரஸ் தலை​மைக்​காக 6 மணி நேரத்​துக்கு மேல் காத்​திருந்து கூட்​டணி பேசினீர்​களே.

உங்​கள் குடும்​பத்​துக்கு ஒரு பிரச்​சினை என்​றதும், மகளுக்கு ‘திஹார்’ என்று காங்​கிரஸ் சொல்ல, ‘பகீர்’ என்று பதறி, வயதான காலத்​தி​லும் டெல்​லிக்கு சென்​று, தீர்ப்​புக்கு சில நிமிடங்​கள் முன்பு சோனியா காந்​தியை சந்​தித்​தாரே கருணாநி​தி.

அறி​வாலய மேல் மாடி ரெய்டை பார்த்து பயந்​து, கீழ் மாடி​யில் “63 நாயன்​மார்​களை கொடுக்​கிறேன்” என்​றும் கூட்​டணி பேசி​னாரே. தென் தமிழக மக்​கள் வெள்​ளத்​தில் தத்​தளித்​த​போது, மக்​கள் எக்​கேடு கெட்​டுப்​போ​னால் என்ன என்று நீங்​கள் டெல்​லி​யில் இண்​டியா கூட்​டணி பேச்​சு​வார்த்தை நடத்​தினீர்​களே. அடுத்​தவர்​களை விமர்​சிக்க உங்​களுக்கு தகுதி இல்​லை. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT