முன்னாள் ராணுவ வீரர்களுக்கு தேர்தல் பணியாற்ற காவல் துறை அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு தேர்தல் பணியாற்ற காவல் துறை அழைப்பு
Updated on
1 min read

சென்னை: தேர்தல் பணி​யாற்ற முன்​னாள் ராணுவ வீரர்​களுக்கு சென்னை காவல் துறை அழைப்பு விடுத்​துள்​ளது. தமிழக சட்​டப்​பேரவை தேர்தல் வாக்​குப்​ப​திவு அடுத்த மாதம் 23-ம் தேதி ஒரே கட்​ட​மாக நடை​பெற உள்​ளது.

இதற்​கான ஏற்​பாடு​களை தேர்தல் ஆணை​யம் முழு​வீச்​சில் செய்து வரு​கிறது. அதன் ஒரு பகு​தி​யாக, ‘தேர்தல் பணி​யாற்ற விருப்​பம் உள்ள முன்​னாள் ராணுவ வீரர்​கள் விண்​ணப்​பிக்​கலாம்’ என சென்னை காவல் துறை தேர்தல் பிரிவு அதி​காரி​கள் அறி​விப்பு வெளி​யிட்​டுள்​ளனர்.

இது தொடர்​பாக அவர்​கள் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சட்​டப்​பேரவை தேர்​தலை முன்​னிட்​டு, தேர்தல் பணியாற்ற விருப்​பம் உள்ள ஓய்வு பெற்ற போலீஸ் அதி​காரி​கள், போலீ​ஸார், முன்​னாள் ராணுவ வீரர்​கள் மற்​றும் முன்​னாள் துணை ராணுவ வீரர்​கள் தாங்​கள் வசிக்​கும் பகு​திக்கு உட்​பட்ட சென்னை காவல் இணை ஆணை​யர் அலு​வல​கத்​தில் செயல்​படும் தேர்தல் பிரிவு ஆய்​வாளரைத் தொடர்பு கொண்டு வரும் 26-ம் தேதிக்​குள் தங்​களின் பெயர், முகவரியை பதிவு செய்​து​கொள்​ள​வும்.

தேர்​தலில் பணிபுரிவோருக்கு அரசால் நிர்​ண​யிக்​கப்​படும் ஊதி​யம் பெற்​றுத் தரப்​படும். விருப்​பம் உள்​ளவர்​கள் சென்னை வடக்கு மண்டல ஆய்​வாளர் ஆனந்த் 9498145519, மேற்கு மண்டல ஆய்​வாளர் சாந்​தினி தேவி 9840106030, கிழக்கு மண்டல ஆய்​வாளர் பத்​மகு​மாரி 9498197388, தெற்கு மண்டல ஆய்​வாளர் துர்கா தேவி 9498003162 ஆகியோரை தொடர்பு கொள்​ளலாம். இவ்​வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு தேர்தல் பணியாற்ற காவல் துறை அழைப்பு
சென்னை | பொதுமக்களிடம் ரூ.77 லட்சம் முதலீடு வசூலித்து மோசடி: நிதி நிறுவன நிர்வாகிகளுக்கு சிறை தண்டனை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in