தமிழகம்

டிட்வா புயல் பாதிப்பு குறித்து முதல்வர் ஆலோசனை: மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இழப்பீடு வழங்க உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: டிட்வா புயல் கனமழை​யால் ஏற்​பட்​டுள்ள பாதிப்​பு​கள் மற்​றும் பயிர்​சேதங்​கள், மேற்​கொள்​ளப்​பட்டு வரும் மீட்பு நடவடிக்​கைகள் குறித்த ஆய்​வுக் கூட்​டம் தலைமைச் செயல​கத்​தில் நேற்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில் நடந்​தது.

இந்த கூட்​டத்​தில், தற்​போது பெய்​து​வரும் மழை​யால், வேளாண் பயிர்​கள் குறிப்​பாக நெற்​ப​யிர் சேதம், இதர பயிர்​கள் சேதம் குறித்​தும், தோட்​டக்​கலை பயிர்​கள் சேதம் குறித்​தும் கணக்​கெடுப்பு பணி​களை தொடங்​கி, அதுதொடர்​பாக உடனடி​யாக நடவடிக்​கைகள் மேற்​கொள்ள வேண்​டும். கனமழை​யால் பாதிக்கப்​பட்ட இடங்​களில் தேங்​கியுள்ள வெள்​ளநீர் வடிவதற்​கான அனைத்து பணி​களை​யும் உடனடி​யாக மேற்​கொள்​ளு​மாறு முதல்​வர் அறி​வுறுத்​தி​னார்.

மேலும் கடந்த அக்​டோபரில் பெய்த மழை​யால் ஏற்​பட்ட பயிர் ​பா​திப்​பு​களுக்​கான கணக்கெடுப்பு பணி​கள் முடிவடைந்​து, 33 சதவீதத்​துக்​கும் மேல் பாதிக்​கப்​பட்ட 4,235 ஹெக்​டேர் பயிர்​களுக்​கும் 345 ஹெக்​டேர் தோட்​டக்​கலை பயிர்​களுக்​கும் மாநில பேரிடர் நிவாரண நிதியி​லிருந்து உரிய நிவாரணம் வழங்​க முதல்வர் உத்​தர​விட்​டார். டிட்வா புயல் காரண​மாக குடிசை வீடு​கள் மற்​றும் இதர வீடு​களின் சேதங்​கள், மனித உயி​ரிழப்புகள், கால்நடைகள் பலி போன்​றவற்​றுக்கு இழப்​பீடை மாவட்ட ஆட்​சியர்கள் விரைந்து வழங்​க வேண்​டும்.

கனமழை காரண​மாக பல்வேறு மாவட்​டங்​களில் 39 நிவாரண முகாம்​களில் தங்​கவைக்​கப்​பட்​டுள்ள மக்​களுக்கு தேவை​யான குடிநீர், உணவு, மருத்​துவ வசதி​கள் உள்​ளிட்ட அனைத்து வசதி​களை​யும் செய்து தர வேண்டும். இப்​பணி​களை தேவைப்​படும் காலம் வரை தொடர்ந்து செய்துதர வேண்​டும் என்று முதல்​வர் அறி​வுறுத்​தி​னார்.

ஏற்​கெனவே, கடந்த நவ.28-ம் தேதி அதி​க​னமழை எச்​சரிக்கை விடுக்​கப்​பட்​ட 14 மாவட்ட ஆட்​சியர்​களு​டன் காணொலி மூல​மாக ஆய்வு முதல்வர் மேற்கொண்டார். அதன் தொடர்ச்​சி​யாக, தற்​போது டிட்வா புயல் காரண​மாக டெல்டா மாவட்​டங்​களில் பெய்​துள்ள கனமழை மற்​றும் பிற மாவட்​டங்​களில் பரவலாக மழை​யும் பெய்து வரு​வ​தால் ஏற்​பட்​டுள்ள பாதிப்​பு​கள் மற்​றும் பயிர்சேதம் தொடர்​பாக ஆய்வு மேற்​கொள்​ளப்​பட்​டது. இதனை அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு ஒன்று தெரிவிக்​கிறது.

இந்​தக் கூட்​டத்​தில் தலைமை செயலர் நா.​முரு​கானந்​தம், வரு​வாய் நிர்​வாக ஆணை​யர் எம்.​சாய்​கு​மார், வரு​வாய் மற்​றும் பேரிடர் மேலாண்​மைத் துறை செயலர் பெ.அ​மு​தா, ஆணை​யர் சிஜி தாமஸ் வைத்​யன், வேளாண் உற்​பத்தி ஆணை​யர் மற்​றும் செய​லா​ளர் வ.தட்​சிணா​மூர்த்​தி, வேளாண்மை இயக்குநர் பா.​முரு​கேஷ், தோட்​டக்​கலை மற்​றும் மலைப்​ப​யிர்கள் துறை இயக்​குநர் குமர​வேல் பாண்டியன் உள்​ளிட்​டோர் பங்​கேற்றனர்.

இதனிடையே ஸ்டா​லின் வெளி​யிட்ட சமூக வலை​தளப்​ப​தி​வில் கூறி​யிருப்​ப​தாவது: டிட்வா புயல் தொடர் மழை​யி​னால் கூடு​தல் பாதிப்​புக்​குள்​ளாகி இருக்​கும் டெல்டா விவ​சா​யிகளை காப்​போம். அக்​டோபர் தொடங்​கி, தற்​போது வரையி​லான கனமழை​யால் சேதமடைந்​துள்ள பயிர்​கள், வீடு​கள், மனித உயி​ரிழப்​பு​கள், கால்​நடை பலி ஆகிய​வற்​றுக்கு மாநிலப் பேரிடர் நிதி​யில் இருந்து இழப்​பீடு வழங்க உத்​தர​விட்​டுள்ளேன். இவ்​வாறு கூறியு​ள்​ளார்​.

SCROLL FOR NEXT