மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் கமல் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நினைவுப் பரிசு வழங்கிய மநீம தலைவர் கமல்ஹாசன். உடன், கூட்டணி கட்சித் தலைவர்கள். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

 
தமிழகம்

காந்தியை மக்கள் மனதிலிருந்து அகற்ற திட்டம்: பாஜக அரசு மீது முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

மதுரை: ​காந்​தி​யடிகளை மக்​கள் மனதிலிருந்து அகற்ற மத்​திய பாஜக அரசு திட்​ட​மிட்​டுள்​ளது என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பேசி​னார்.

மக்​கள் நீதி மய்​யத்​தின் கமல் பண்​பாட்டு மையம் சார்​பில், காந்​தி​யை​யும் அவரது சகோ​தரர்​களை​யும் நினை​வு​கூரும் ‘மறவோம்’ எனும் நிகழ்ச்சி கட்​சி தலை​வர் கமல்​ஹாசன் தலை​மை​யில் மதுரை காந்தி நினைவு அருங்​காட்​சி​யகத்​தில் நேற்று நடை​பெற்​றது. எழுத்​தாளர் செல்​வேந்​திரன் வரவேற்​றார்.

          

இந்​நிகழ்ச்​சி​யில், முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பேசி​ய​தாவது: காந்தி என்​றவுடன் நமக்கு நினை​வுக்கு வரு​வது அரை​யாடை​தான். அந்த அரை​யாடை​யுடன் அவர் முதன்​முதலில் தோன்​றிய மதுரை​யி்ல் இந்​நிகழ்ச்சி நடப்​பது மிக​வும் பொருத்​த​மானது. காந்​தி​யைப் பின்​பற்​றிய பெரி​யார், பின்​னாளில் அவருடன் முரண்​பட்​டாலும், அவர் கொல்​லப்​பட்​ட​போது இந்​திய நாட்​டுக்கு ‘காந்தி தேசம்’ என பெயர் சூட்ட வேண்​டும் என்று கூறி​னார்.

காந்​தி​யை மக்​கள் மனதிலிருந்து அகற்ற வேண்​டும் என மத்​திய பாஜக அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. காந்தி என்ற பெயரே இருக்​கக் கூடாது என 100 நாள் வேலைதிட்​டத்​திலிருந்து அவரது பெயரை நீக்​கினர். ரூபாய் நோட்​டிலிருந்​தும் காந்​தியை எடுத்​தா​லும் எடுத்​து​விடு​வார்​கள். வெறுப்பு அரசி​யலைத் திணிக்​கிற ஒரு கட்சி மத்​தி​யில் ஆளும் காலத்​தில், காந்​தி​யத்தை நம் நாடு இறுகப் பற்​றிக்​கொள்ள வேண்​டும் என வலி​யுறுத்​து​வது​தான் இந்​நிகழ்ச்​சி​யின் நோக்​கம். இந்து - முஸ்​லிம் ஒற்​றுமை​யின் அடை​யாளம் காந்​தி.

இந்​தியா அனை​வருக்​கு​மான நாடு என்ற கருத்​தி​யல்​தான் காந்​தி. இதனால் ​தான் மதத்தை வைத்து அரசி​யல்பிழைப்பு நடத்​தும் அற்​பர்​களுக்கு காந்​தி​யைப் பிடிக்​க​வில்​லை. அண்​மை​யில் பாஜகவைச் சேர்ந்த ஒரு முதல்​வரே முஸ்​லிம்​களுக்கு எதி​ராக வன்​முறையைத் தூண்​டு​வதைப் பார்த்​திருப்​பீர்​கள். இதைச் சொல்​வதற்கே எனக்கு வெட்​க​மாக இருக்​கிறது.

ஆனால் எந்த வெட்​க​மும் இல்​லாமல் இப்​படி​யான செயல்​களில் அவர்​கள் ஈடு​படு​கிறார்​கள். சமூக ரீதி​யாக, கல்வி ரீதி​யாக பிற்​படுத்​தப்​பட்ட முஸ்​லிம்​களுக்கு இடஒதுக்​கீடு கொடுக்​கக் கூடாது என்று கருதுகிறார்​கள். காந்​தி​யடிகள் வலி​யுறுத்​திய மதநல்​லிணக்​கம்​தான் தற்​போது இந்​தி​யா​வுக்கு தேவை. சமநீ​தி, சமூக நீதிக்​காக கமல்​ஹாசனின் குரல் தொடர்ந்து ஒலிக்​கட்​டும். காந்​தி​யடிகள் வலி​யுறுத்​திய அன்​பின் பாதையை பாது​காக்க நாம் ஒன்​றிணைவோம். இவ்​வாறு அவர் பேசி​னார்.

இந்​நிகழ்ச்​சி​யில், மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ, காங்​கிரஸ் மாநிலத் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, மார்க்​சிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம், இந்​திய கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் வீர​பாண்​டியன், விசிக தலை​வர் திரு​மாவளவன், தமிழக வாழ்​வுரிமை கட்சி தலை​வர் வேல்​முரு​கன், இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் கட்சி தேசி​யத் தலை​வர் கே.எம்​.​காதர் மொகிதீன், மனிதநேய மக்​கள் கட்​சித் தலை​வர் ஜவாஹிருல்​லா, கொமதேக துணைப் பொதுச் செய​லா​ளர் நித்​தி​யானந்​தன் ஆகியோர் பங்கேற்​றனர்.

SCROLL FOR NEXT