உயர்​கல்வி அமைச்சர் ​விஸ்வநாதன்

 
தமிழகம்

தமிழக முதல்வரே பல்கலைக்கழகங்களின் வேந்தராகும் முறை கட்டாயமில்லை: அமைச்சர் விஸ்வநாதன் தகவல்

செய்திப்பிரிவு

மதுரை: தமிழக முதல்​வரே பல்​கலைக்கழகங்​களின் வேந்தர் என்ற திமுக அரசின் நடை​முறையை பின்​பற்​றும் கட்​டா​யம் எங்​களுக்கு ஏதும் கிடை​யாது என்று உயர்​கல்வி அமைச்​சர் பெ.​விஸ்​வ​நாதன் மதுரை​யில் நேற்று தெரி​வித்​தார்.

முன்​னாள் பிரதமர் நேரு​வின் நினைவு தினத்தை முன்​னிட்​டு, மதுரை தல்​லாகுளத்​தில் நேற்று காங்​கிரஸ் சார்​பில் அவரது சிலைக்கு பெ.​விஸ்​வ​நாதன் மரி​யாதை செலுத்​தி​னார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் தெரி​வித்​த​தாவது:

மேகே​தாட்டு அணை விஷ​யத்​தில் காங்​கிரஸ் கட்​சி​யின் நிலைப்​பாடு மிகத் தெளி​வானது. ஒரு செங்​கல்லை கூட கர்​நாடக அரசு எடுத்து வைக்​கக் கூடாது. அதற்கு அனு​ம​திக்க மாட்​டோம். இந்த ஆட்சி 5 ஆண்​டு​கள் நிலைத்து நிற்​கும். முதல்​வரின் கரத்தை வலுப்படுத்த இந்த ஆட்​சியை 5 ஆண்​டு​கள் கொண்டு செல்​வதற்கு காங்​கிரஸ் இரும்புக் கோட்டையாக அவர் பின்​னால் நிற்கும்.

உயர் கல்​வித்​துறை சார்​பில் கல்​லூரி சேர்க்கை கவுன்​சிலிங் தொடர்​பாக ஜூன் 3-ம் தேதிக்​குள் அதி​காரி​களு​டன் ஆலோ​சனை நடத்தி அறி​விப்​பேன். மருத்​து​வம், பொறி​யியல் தேர்​வில் தமிழ் இடம் பெறாதது ‘டெக்​னிக்​கல்’ காரணம்.

தமிழக முதல்​வரே பல்​கலைக்​கழகங்​களின் வேந்​தர் என்ற திமுக அரசின் நடை​முறையை பின்​பற்​றும் கட்​டா​யம் எங்​களுக்கு கிடை​யாது. இதில் தமிழக முதல்​வரின் கொள்கை முடி​வின்​படி செயல்​படு​வோம்.

ஒரு கட்சி எம்​எல்ஏ அவரது விருப்​பத்​துக்கு ஏற்​ற​வாறு பதவியை ராஜி​னாமா செய்​து​ விட்​டு, விரும்​பும் கட்​சி​யில் இணைந்து மீண்​டும் மக்​களை சந்​தித்து எம்​எல்​ஏ​வாக விரும்​பு​கிறார். இது ஜனநாயகத்​தில் விரோத​மாகவோ, குதிரை பேர​மாகவோ கருத​வில்​லை.

அமைச்சர் மறுப்பு: இதனிடையே துணைவேந்தர் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலயில், விளக்கமளித்து விஸ்வநாதன் கூறுகையில், "பல்கலைக் கழகங்களில் வேந்தர்களாக முதலமைச்சர் பொறுப்பேற்பது குறித்து முதல்வர் விஜய் உரிய நேரத்தில் கொள்கை முடிவு எடுப்பார் என்றுதான் கூறினேன்.

சில ஊடகங்கள் திரித்து செய்தி வெளியிட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். மறுக்கிறேன். மாநில உரிமைகளை பறிக்கிற வகையில் எனது கருத்து அமைந்ததாக கூறுவது உண்மைக்கு புறம்பானது. இத்தகைய வாதங்களை முன்வைப்பது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயலாகும்" எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT