தமிழகம்

இது ஒரு கட்சியின் அரசு அல்ல; இனத்தின் அரசு: அயலகத் தமிழர் தினவிழாவில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

செய்திப்பிரிவு

சென்னை: மொழி உரிமைக்​காக உயிர்த் தியாகம் செய்த இயக்​கம் திமுக என்​றும், இது ஒரு கட்​சி​யின் அரசு அல்ல; இனத்​தின் அரசு என்​றும் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளார்.

சென்​னை​யில் 2-வது நாளாக நேற்​றும் அயல​கத் தமிழர் தின​ விழா நடந்​தது. இதற்கு தலைமை தாங்கி முதல்​வர் ஸ்டா​லின் பேசியதாவது: இலங்​கை​யில் மாகாணங்களுக்​கான அதி​காரப் பரவலாக்கத்தை இலங்கை அரசு உறுதிசெய்ய இந்​திய அரசு அழுத்​தம் தரு​மாறு பிரதமர் மோடிக்​கு கடிதம் எழு​தி​யுள்​ளேன். ‘உங்​கள் கனவைச் சொல்​லுங்​கள்’ திட்​டத்​தில், புலம்​பெயர்ந்த தமிழர்​களும் பங்​கேற்க வேண்​டும்.

மொழி உரிமைக்​காகத் தியாகம் செய்த இயக்​கம்​தான் திமுக. நமக்கு மொழிப்​பற்​று, இனப்​பற்று உண்​டு, ஆனால் மொழிவெறி, இனவெறி கிடை​யாது. நமக்​குள் பிளவு​கள் ஏற்பட அனு​ம​திக்​காதீர்​கள். கீழடி ஆய்​வு​கள் நாம் 4,000 ஆண்​டுப் பழமை​யான வரலாற்​றுக்​குச் சொந்​தக்​காரர்​கள் என்​பதை உலகுக்கு உரக்​கச் சொல்கிறது. அதனால்​தான் இது ஒரு கட்​சி​யின் அரசு அல்ல, ஒரு இனத்​தின் அரசு. மொழி சிதைந்​தால் இனம் சிதை​யும், இனம் சிதைந்​தால் பண்​பாடு சிதை​யும். பண்பாடு சிதைந்தால் நமது அடை​யாளமே காணா​மல் போய்​விடும். எனவே, எங்கு வாழ்ந்​தா​லும் ஒற்​றுமை​யுடன் வாழுங்​கள். தமிழகத்​துக்​கும் அடிக்​கடி வாருங்​கள். இவ்​வாறு அவர் பேசி​னார்.

மேலும் அயல​கத் தமிழர்​கள் பலருக்கு தமிழ் மாமணி மற்​றும் கனியன் பூங்​குன்​ற​னார் விருதுகளை முதல்​வர் வழங்​கி​னார். வெளி​நாடு​களில் கற்​பிப்​ப​தற்​காக 10 தமிழ் ஆசிரியர்​களை நியமித்து ஆணை​களை வழங்​கி​னார். மாணவர்​களுக்கு ஜெர்​மன் மொழி பயிற்சி வழங்கி ஜெர்​மனியில் வேலை​வாய்ப்பு வழங்​கும் நோக்​கில் ஓஎம்​சிஎல்​லுடன் அழகப்பா பல்​கலைக்​கழக​மும் விஐடி பல்​கலைக்​கழக​மும் முதல்​வர் முன்​னிலை​யில் புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் செய்தன.

மேலும் பாரம்​பரிய கலாச்​சார சுற்​றுலாவை மேம்​படுத்​துவதற்​காக அமெரிக்க தமிழர்கள் மற்​றும் அசோக் லேலண்ட் நிறு​வனம் இணைந்​து, ரூ.1.89 கோடி​யில் வழங்​கப்​பட்ட இரட்டைத் தள மின்​சார பேருந்து சேவையை முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்​தார்.

இந்த விழா​வில் மலேசிய துணை அமைச்​சர் எம்​.குலசேகரன், ஐக்​கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த இசா எல்​கு​ராவ், இலங்கை அமைச்​சர் சுந்​தரலிங்​கம் பிரதீப், மொரிசீயஸ் இணை அமைச்​சர் ராஜன் நரசிங்​கன், பினாங்கு மாநில சுற்​றுச்​சூழல் துறை நிர்​வாகக்​குழு உறுப்​பினர் சுந்​தர​ராஜு சோமு, கயானா முன்​னாள் பிரதமர் மோசஸ் வீரா​சாமி நாக​முத்​து, தமிழக அமைச்​சர்​ சா.​மு.​நாசர்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

SCROLL FOR NEXT