நாடாளுமன்றம், பேரவைகளில் 7% ஒதுக்கீடு: சட்டத்திருத்தம் கோரி மாற்றுத் திறனாளிகள் மனு

நாடாளுமன்றம், பேரவைகளில் 7% ஒதுக்கீடு: சட்டத்திருத்தம் கோரி மாற்றுத் திறனாளிகள் மனு
Updated on
1 min read

சென்னை: நா​டாளு​மன்​றம் மற்​றும் சட்​டப்​பேர​வை​களில் மாற்​றுத் திற​னாளி​களுக்கு 7 சதவீத இடஒதுக்​கீடு வழங்​கும் வகை​யில் சட்ட திருத்​தம் கொண்டு வர மத்​திய அரசுக்கு உத்​தர​விடக் கோரி உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டுள்​ளது.

கள்​ளக்​குறிச்சி மாவட்​டம் கனி​யாமூரைச் சேர்ந்த மாற்​றுத் திற​னாளி​யான கே.மணிவண்​ணன் என்பவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு: கடந்த 2011-ம் ஆண்டு மக்​கள் தொகை கணக்​கெடுப்​பின்​படி நாடு முழு​வதும் 2 கோடியே 68 லட்​சம் மாற்​றுத் திற​னாளி​கள் இருப்​ப​தாக மத்​திய அரசின் புள்ளி விவரங்​கள் தெரிவிக்​கின்​றன. மாற்​றுத் திற​னாளி​களுக்கு உயர் கல்வி மற்​றும் அரசின் வேலைவாய்ப்​பு​களில் 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்​கி​யும் மாற்​றுத் திற​னாளி​களுக்கு உரிய பலன் கிடைக்​க​வில்​லை.

எனவே நாடாளு​மன்​றம் மற்​றும் சட்​டப்​பேர​வை​களில் மாற்​றுத் திற​னாளி​களுக்கு 7 சதவீத இடஒதுக்​கீடு வழங்​கக்​கோரி தேர்​தல் ஆணை​யத்​துக்கு தொடர்ச்​சி​யாக மனு அளிக்​கப்​பட்​டது. அதற்கு இதுதொடர்​பாக அரசி​யலமைப்பு சட்டரீதி​யாக​வும், தொகுதி மறு​வரை​யிலும் வழி​வகை செய்​யப்​பட​வில்லை என தேர்​தல் ஆணை​யம் பதிலளித்​துள்​ளது. எனவே இதுதொடர்​பாக உரிய சட்​டத்​திருத்​தம் கொண்டு வர மத்​திய அரசுக்கு உத்​தர​விட வேண்​டும்.இவ்​வாறு கோரி​யுள்​ளார். இந்த மனு விரை​வில் வி​சா​ரணைக்​கு வரவுள்​ளது.

நாடாளுமன்றம், பேரவைகளில் 7% ஒதுக்கீடு: சட்டத்திருத்தம் கோரி மாற்றுத் திறனாளிகள் மனு
பெற்றோரை கைவிடும் அரசு ஊழியர்களுக்கு 15 சதவீதம் வரை ஊதியம் குறைக்கப்படும்: தெலங்கானா மாநில முதல்வர் எச்சரிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in