தமிழகம்

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஜோசப் விஜய் ஆலோசனை

செய்திப்பிரிவு

சென்னை: பு​திய முதல்​வ​ராக பொறுப்​பேற்ற பின்​னர் ஜோசப் விஜய் தலை​மைச் செயல​கத்​துக்கு சென்​று, முதல் நாளில் சட்​டம் ஒழுங்கு விவ​காரம் குறித்து அதி​காரி​களு​டன் ஆலோ​சனை நடத்தினார்.

தமிழகத்​தில் புதிய முதல்​வ​ராக ஜோசப் விஜய் நேற்று பதவி​யேற்றுக் கொண்​டார். அவருக்கு ஆளுநர் அர்​லேகர் பதவிப் பிரமாண​மும், ரகசி​யக் காப்​புப் பிர​மாண​மும் செய்து வைத்​தார். பதவி​யேற்பு விழா முடிந்த பின்​னர், தலை​மைச் செயல​கத்​துக்கு சென்​றார். அங்கு காவல்​துறை​யினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்​றுக் கொண்​டார். பின்​னர் அமைச்​சர்​கள், அதிகாரிகள் புடைசூழ, முதல்​வர் அறைக்​குச் சென்​றார். முதல்​வர் நாற்​காலியை சற்​று ​வாஞ்​சை​யுடன் உற்​று​நோக்​கி​விட்டு பின்​னர் அதில் அமர்ந்​தார்.

தொடர்ந்​து, தற்​காலிக சட்​டப்​பேர​வைத் தலை​வரை நியமிப்பதற்கான ஆவணம் உட்பட சில கோப்​புகளில் கையெழுத்திட்டு தனது அலு​வல் பணி​களை தொடங்​கி​னார். இதையடுத்து அனைத்து துறை​களின் செயலர்​கள், இயக்​குநர்​கள், அலு​வலர்​கள் பூங்​கொத்து கொடுத்து வாழ்த்​துத் தெரி​வித்​தனர். அப்​போது செங்​கோட்​டையன், ஆனந்த் உள்​ளிட்ட அமைச்​சர்​கள் மற்​றும் தவெக முக்​கிய நிர்​வாகி​கள் உடனிருந்​தனர்.

இதையடுத்து தமிழகத்​தின் சட்​டம் ஒழுங்கு நிலை குறித்து ஆய்​வுக் கூட்​டம், முதல்​வர் தலை​மை​யில் நடை​பெற்​றது. இந்​தக் கூட்​டத்​தில் மாநிலத்​தின் தற்​போதைய சட்​டம் ஒழுங்கு நிலை குறித்து விரி​வாக ஆய்வு மேற்​கொள்​ளப்​பட்​டது. பெண்​கள் பாது​காப்பை மேம்​படுத்​துதல், போதைப் பொருட்​கள் தொடர்​பான குற்​றங்​களைத் தடுத்​து, கடுமை​யான நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளுதல் ஆகியவை குறித்​தும் விவா​திக்​கப்​பட்​டது.

நிதி​நிலை குறித்​தும்.. இந்த விவ​காரத்​தில் தொடர்ச்​சி​யான ஆய்​வு​கள் மேற்​கொள்​ளப்​படும் என்​ப​தால், கண்​காணிப்பு பணி​களை தீவிரப்​படுத்த வேண்​டுமென அலு​வலர்​களுக்கு அறி​வுறுத்​தப்​பட்​டது. அரசின் தற்​போதைய நிதி​நிலை குறித்​தும் விவா​திக்​கப்​பட்​ட​தாகக் கூறப்​படு​கிறது.

இந்​தக் கூட்​டத்​தில் தலை​மைச் செயலர் எம்​.​சாய்​கு​மார், உள்​துறை செயலர் க.மணி​வாசன், டிஜிபி சந்​தீப் ராய் ரத்​தோர் உள்​ளிட்ட உயர் அலு​வலர்​கள் கலந்து கொண்​டனர்​.

SCROLL FOR NEXT