காரைக்குடி: காரைக்குடியில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின்போது நடந்த மோதல் தொடர்பாக திமுக பேரூராட்சித் தலைவர், துணை மேயர், அதிமுக முன்னாள் எம்எல்ஏ உட்பட 137 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மகர்நோன்பு திடலில் நேற்றுமுன்தினம் இரவு தனியார் தொலைக்காட்சி சார்பில் தேர்தல் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், திமுக மாவட்ட துணைச் செயலாளரும் திருப்புவனம் பேரூராட்சித் தலைவருமான சேங்கைமாறன், அதிமுக முன்னாள் எம்எல்ஏ உமாதேவன், நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது அதிமுக, திமுக தரப்பினர் தங்களது ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற வளர்ச்சித் திட்டங்களை எடுத்துரைத்தனர். தொடர்ந்து இடும்பாவனம் கார்த்திக் பேசியபோது தெரிவித்த சில கருத்துகளுக்கு திமுக கூட்டணிக் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.இதில், திமுக மாவட்ட துணைச் செயலாளரும் திருப்புவனம் பேரூராட்சித் தலைவருமான சேங்கைமாறன், அதிமுக முன்னாள் எம்எல்ஏ உமாதேவன், நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது அதிமுக, திமுக தரப்பினர் தங்களது ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற வளர்ச்சித் திட்டங்களை எடுத்துரைத்தனர். தொடர்ந்து இடும்பாவனம் கார்த்திக் பேசியபோது தெரிவித்த சில கருத்துகளுக்கு திமுக கூட்டணிக் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அப்போது அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.கே.உமாதேவன் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக பேசியதால் மோதல் ஏற்பட்டது. இதில் மூவர் காயமடைந்தனர்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இளங்கோ அளித்த புகாரின்பேரில், திமுக மாவட்டத் துணைச் செயலாளர் சேங்கைமாறன், துணை மேயர் குணசேகரன், மதிமுக மாவட்டச் செயலாளர் பசும்பொன் மனோகரன் மற்றும் திமுக மாநகராட்சி கவுன்சிலர்கள், நிர்வாகிகள், காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட 16 பேர் மீது காரைக்குடி தெற்கு போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
அதேபோல் திமுக துணை மேயர் குணசேகரன் அளித்த புகாரின்பேரில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.கே.உமா தேவன், நகரச் செயலாளர் மெய்யப்பன் மற்றும் அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உட்பட 121 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.