தமிழகம்

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் 2,602 புதிய செல்போன்கள் இருப்பு வைப்பு: அதிமுக புகார் குறித்து தலைமைச் செயலாளர் விளக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: சேலம் மாவட்ட ஆட்​சி​யரகத்தில் 2,602 செல்​போன்​கள் வைக்​கப்​பட்​டுள்​ளது குறித்து விசா​ரணை நடத்த அதி​முக வழக்​கறிஞரணி செய​லா​ளர் ​இன்​பதுரை, தலைமை தேர்​தல் அதி​காரியிடம் புகார் அளித்​தார்.

இதுதொடர்​பாக சென்னையில் அவர் செய்​தியாளர்​களிடம் கூறிய​தாவது: தேர்​தல் நடத்தை விதி​கள் அமலுக்கு வந்​த நிலையில், சேலம் மாவட்ட ஆட்​சி​யரகத்தில் 2,604 செல்​போன்​கள் மாவட்ட திட்ட அலு​வலர் அலு​வல​கத்​தில் வைக்​கப்​பட்​டுள்​ளன.

          

அவற்றை அங்​கன்​வாடி பணியாளர், ஊரக வேலைத்​திட்ட மேற்பார்​வை​யாளர்​கள் உள்ளிட்ட அரசு ஊழியர்​களுக்கு கொடுக்க திட்​ட​மிட்​டுள்​ள​தாக தகவல் கிடைத்​தது.

அந்த செல்​போன்​களை திமுகவே வழங்கியிருக்​குமோ என்ற அச்சம் எங்களுக்கு உள்​ளது இது குறித்து விசா​ரிக்க வலியுறுத்தி தலை​மைத் தேர்​தல் அதி​காரி​யிடம் புகார் மனு அளித்​திருக்​கிறோம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

இது தொடர்​பாக தமிழக அரசு வெளி​யிட்ட விளக்​கம்: தேர்​தல் நடத்தை விதி​கள் அமலுக்கு வரு​வதற்கு முன்பாகவே மார்ச் 13-ம் தேதி அங்​கன்​வாடி பணி​யாளர்​களுக்கு 2,696 செல்​போன்​கள் அரசிட​மிருந்து வரப்​பெற்​று, ஆட்​சி​யர் அலு​வலக 2-ம் தளத்​தில் உள்ள அறையில் பாது​காப்​பாக வைக்​கப்பட்​டது.

நடத்தை அமலுக்கு வந்​த​தால், அந்த அறை பூட்டி வைக்​கப்​பட்​டு, அதன்சாவி மாவட்ட தேர்​தல் அலுவலகத்தில் ஒப்​படைக்​கப்​பட்​டது.எனவே நடத்தை விதி​கள் மீறி அங்​கன் வாடிபணி​யாளர்​களுக்கு புதிய செல்​போன்​கள் வழங்​கப்​பட்​ட​தாக வந்த புகாரில் உண்மை இல்​லை. தேர்​தல்​ நடத்​தை விதி​களும்​ மீறப்​பட​வில்​லை. இவ்​​வாறு அதில்​ தெரிவிக்​கப்​பட்​டுஉள்​ளது.

SCROLL FOR NEXT