சட்டவிரோத பணப்பரிமாற்றம்: அதிமுகவினர் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிய உத்தரவிட திமுக மனு

சட்டவிரோத பணப்பரிமாற்றம்: அதிமுகவினர் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிய உத்தரவிட திமுக மனு
Updated on
1 min read

சென்னை: உயர் நீதி​மன்​றத்​தில் திமுக எம்​.பி. கிரி​ராஜன் தொடர்ந்த வழக்கில் கூறி​யுள்​ள​தாவது: வரு​மானத்​துக்கு அதி​க​மாக சொத்​துக் குவிப்​பில் ஈடு​பட்​ட​தாக​வும், டெண்​டர் முறை​கேடு செய்​த​தாக​வும் அதிமுக முன்​னாள் அமைச்​சர்கள் எஸ்​.பி.வேலுமணி, பி.தங்​கமணி, சி.​விஜய​பாஸ்​கர், எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர், சி.​காம​ராஜ், கே.சி.வீரமணி, கே.பிஅன்​பழகன், அதிமுக முன்​னாள் எம்​எல்ஏ தி.நகர் சத்யா மற்​றும் சேலம் இளங்​கோவன் ஆகியோர் மீது வழக்​குகள் ​பதிவு செய்​யப்​பட்டு நிலு​வை​யில் உள்​ளன.

இது​போன்ற விவ​காரங்​களில் அமலாக்​கத்துறை விசா​ரணை நடத்த முடி​யும். ஆனால், பலமுறை மனு அனுப்​பி​யும் அதிமுகவினர் 9 பேர் மீது அமலாக்​கத் துறை நடவடிக்​கை​ எடுக்​க​வில்​லை.

எனவே சட்டவிரோத பணப் பரி​மாற்ற தடைச்சட்​டத்​தின்​கீழ் வழக்கு பதிவு செய்து விசாரிக்க அமலாக்​கத் துறைக்கு உத்​தர​விட வேண்​டும். இவ்வாறு அந்த மனுவில் கோரியுள்ளார்.

சட்டவிரோத பணப்பரிமாற்றம்: அதிமுகவினர் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிய உத்தரவிட திமுக மனு
தமிழகத்தில் அடுத்த பருவமழை தொடங்கும் முன்பு சீமை கருவேல மரங்களை வேரோடு அகற்ற ஐகோர்ட் உத்தரவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in