சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்றார். ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலர் சாய்குமார், டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

 
தமிழகம்

போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி 3 கி.மீ. தூரம் மாரத்தான் ஓடிய முதல்வர் விஜய்

அமைச்சர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட 15,000 பேர் பங்கேற்பு

செய்திப்பிரிவு

சென்னை: சர்​வ​தேச போதைப் பொருள் எதிர்ப்பு தினத்​தையொட்டி சென்​னை​யில் நடை​பெற்ற மாரத்​தான் ஓட்​டத்தை முதல்​வர் விஜய் தொடங்கி வைத்​து, அதில் பங்​கேற்​றார். அவருடன் அமைச்​சர்​கள், தலை​மைச் செயலர், டிஜிபி உள்​ளிட்ட அதி​காரி​களும் மாரத்​தானில் கலந்​து​கொண்​டனர்.

சர்​வ​தேச போதைப் பொருள் ஒழிப்​பு, சட்​ட​விரோத கடத்​தல் தடுப்பு தினம் நேற்று கடைபிடிக்​கப்​பட்​டது. இதையொட்​டி, மாணவர்​கள், இளைஞர்​கள், பொது​மக்​களிடம் விழிப்​புணர்வு ஏற்​படுத்​தும் வகை​யில் தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யம் சார்​பில் சென்​னை​யில் ‘ஸ்​டார்ட் ரன், ஸ்டாப் ட்ரக்​ஸ்’ என்ற கருத்​துடன் நேற்று மாரத்​தான் ஓட்​டம் நடத்​தப்​பட்​டது.

நிகழ்ச்​சிக்கு தலைமை வகித்த முதல்​வர் விஜய், விழிப்​புணர்​வுப் பலகை​யில் ‘ஸ்​டார்ட் ரன், ஸ்டாப் ட்ரக்​ஸ், ஸ்போர்ட்ஸை எடு, ட்ரக்ஸை விடு’ என்று எழுதி கையெழுத்​திட்​டார். அவரது தலை​மை​யில் அனை​வரும் போதைப் பொருள் எதிர்ப்பு உறு​தி​மொழி ஏற்​றுக்​கொண்​டனர். இதன்​பிறகு, மெரினா காம​ராஜர் சாலை​யில் உள்ள அண்ணா நினை​விடத்​தில் இருந்து தீவுத்​திடல் வரை மாரத்​தான் ஓட்​டம் தொடங்​கியது.

முதல்​வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்​தார். 6 கி.மீ. தூரம் நடை​பெற்ற ஓட்​டத்​தில், ஒலிம்​பிக் மற்​றும் சர்​வ​தேசப் போட்​டிகளில் கலந்​து​கொண்ட விளை​யாட்டு வீரர்​கள், வீராங்​க​னை​கள், தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யத்​தின் விளை​யாட்டு வீரர்​கள், கல்​லூரி மாணவ, மாணவி​கள், அரசு அலு​வலர்​கள், காவல் துறை அதி​காரி​கள், பொது​மக்​கள் என 15 ஆயிரம் பேர் பங்​கேற்​றனர்.

இவர்​களு​டன் முதல்வர் விஜய், அமைச்​சர்​கள் ஆனந்த், ஆதவ் அர்​ஜு​னா, வெங்​கடரமணன், மரிய​வில்சன், ரா.குமார், தலை​மைச் செயலர் சாய்​கு​மார், டிஜிபி மகேஷ் குமார் அகர்​வால், சென்னை காவல் ஆணை​யர் அமல்​ராஜ், விளை​யாட்​டுத் துறை செயலர் சந்​தீப்நந்​தூரி, தமிழ்​நாடு விளை​யாட்டுமேம்​பாட்டு ஆணைய உறுப்​பினர் செயலர் மேக​நாத ரெட்​டி, மாநக​ராட்சி ஆணை​யர் சமீரன், மாவட்ட ஆட்​சி​யர் மாலதி ஹெலன் உள்​ளிட்​டோரும் மாரத்​தானில் பங்​கேற்று ஓடினர். பின்​னர், வீரர்​களு​டன் கலந்​துரை​யாடிய முதல்​வர் விஜய், அவர்​களு​டன் செல்ஃபி எடுத்​துக் கொண்​டார்.

நிகழ்ச்​சி​யின் முடி​வில் பேசிய அமைச்​சர் ஆதவ் அர்​ஜு​னா, “தமிழக வரலாற்​றில் வேறு எந்த முதல்​வரும் மாரத்​தான் ஓடியது இல்​லை. முதல்​வர் விஜய்​தான் முதல்​முறை​யாக 3 கி.மீ. தூரம் வரை மாரத்​தான் ஓடி​யுள்​ளார். அவரைப் போலவே தமிழக​மும் ஆரோக்​கிய​மாக மாறும்” என்​றார்.

முதல்​வர் விஜய் தனது சமூக வலை​தளப் பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: இளைஞர்​களின் எதிர்​காலத்​தைப் பாது​காக்​க​வும், குற்​றங்​களைத் தடுக்​க​வும் போதைப் பொருட்​களால் ஏற்​படும் தீமை​கள் குறித்த விழிப்​புணர்வை ஏற்​படுத்​து​வது அவசி​யம். கல்​வி, விளை​யாட்​டு, திறன் மேம்​பாடு போன்ற ஆக்​கப்​பூர்​வ​மான செயல்​பாடு​களில் இளைஞர்​களை ஈடு​படுத்​து​வதன் மூல​மாக​வும், கடும் சட்ட நடவடிக்​கை கள் மூல​மாக​வும் போதைப் பொருட்​களை ஒழித்​து, வலிமை​யான சமு​தா​யத்​தைப் படைக்க முடி​யும்.

போதைப் பொருட்​கள் தொடர்​பான குற்​றங்​களைத் தடுக்க தமிழக அரசு எடுத்​து​வரும் பல்​வேறு முன்​னெடுப்​பு​களுக்கு அனை​வரும் துணைநின்​று, போதைப் பொருள் இல்​லாத, பாது​காப்​பான, ஆரோக்​கிய​மான தமிழகத்​தை உரு​வாக்​க உறு​தி​யேற்​போம்​. இவ்​வாறு அவர்​ தெரிவித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT