தமிழகம்

துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து

தமிழினி

சென்னை: ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு தமிழக முதல்வர் விஜய் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணியில் இடம்பெற்றதோடு, தனிநபர் பிரிவிலும் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

இந்திய வீராங்கனைகளின் இச்சாதனைகள் பாராட்டுக்குரியது. இது இளம் தலைமுறையினருக்கு இலக்கை நிர்ணயித்து, விடாமுயற்சியுடன் களமிறங்கி சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிக்கிறது.

இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ள விளையாட்டு வீராங்கனைகளின் வெற்றிப் பயணம் மேலும் பல புதிய வரலாறுகளைப் படைக்கட்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 27 வயதான இளவேனில் வாளறிவன், மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் வெள்ளி வென்றுள்ளார். 252.4 புள்ளிகளை பெற்று அவர் இரண்டாம் இடம் பிடித்தார். ஜப்பான் வீராங்கனை ஹினாதா டைச்சி 253 புள்ளிகளை பெற்று தங்கம் வென்றார்.

SCROLL FOR NEXT