முதல்வருக்கு தெரியாமல் அரசாணை வெளிவந்ததா? - ஆதவ் அர்ஜுனாவுக்கு பெ.சண்முகம் கேள்வி

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு
பட்டினப்பாக்கம் (இடது), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் (வலது)

பட்டினப்பாக்கம் (இடது), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் (வலது)

Updated on
2 min read

சென்னை: “பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது குறித்து முதல்வர் இறுதியான முடிவெடுக்கவில்லை என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சொல்வது ஏற்புடைய கருத்து அல்ல. முதல்வர் முடிவெடுக்காவிட்டால், தலைமைச் செயலக இடம் குறித்து அரசாணை எப்படி வெளிவந்தது” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பெ.சண்முகம், “பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது குறித்து முதல்வர் இறுதியான முடிவெடுக்கவில்லை என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சொல்லியுள்ளார். பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் அரசின் முடிவையே அரசாணை வெளிப்படுத்துகிறது. அந்த அரசாணை முதல்வருக்கு தெரியாமல் வெளிவந்தது என்றால், அதற்கு காரணமான அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி முதல்வரின் ஒப்புதலுடன் தான் அந்த அரசாணை வந்தது என்றால், அது தவறான முடிவு. இடத்தை மாற்ற வேண்டும். மாற்று இடங்களையும் நாங்கள் முன்வைத்துள்ளோம்.

இது மக்கள் நலனுக்காக நாங்கள் வைக்கும் கோரிக்கை. தவெக இல்லாமல் யார் ஆட்சியில் இருந்தாலும், இதே கோரிக்கையை நாங்கள் வைத்திருப்போம். இது தவெகவுக்கு எதிரான போராட்டம் அல்ல. சென்னையில் பல இடங்கள் இருக்கும் போது பிடிவாதமாக மீனவர்களை வெளியேற்றி, அங்கே தலைமைச்செயலகம் அமைப்பது என்பது தவறானது.

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது குறித்து முதல்வர் இறுதியான முடிவெடுக்கவில்லை என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சொல்வது ஏற்புடைய கருத்து அல்ல. முதல்வர் முடிவெடுக்காவிட்டால், தலைமைச் செயலக இடம் குறித்து அரசாணை எப்படி வெளிவந்தது. அது முதல்வருக்கோ, சம்மந்தப்பட்ட அமைச்சருக்கோ தெரியாமல் எப்படி அரசாணை வெளிவந்திருக்க முடியும். இறுதி முடிவு எடுக்கவில்லை என முதல்வரை சொல்ல சொல்லுங்கள்.

நாங்கள் கடந்த திமுக ஆட்சியிலும் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களை கடுமையாக முன்னெடுத்தோம், சட்டப்பேரவையிலும் முன்வைத்தோம். நாங்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் நியாயமானதா என்று பார்க்க வேண்டும். அதனை விடுத்து அப்போது செய்யவில்லை, இப்போது செய்யவில்லை என்பது திசை திருப்பும் தந்திரம்.

அதிமுகவில் வெற்றி பெற்றுவிட்டு 20 நாட்களில் ராஜினாமா செய்துவிட்டு, ஏன் மீண்டும் தேர்தலில் நிற்கிறார்கள் என தவெக வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் பல இடங்களில் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். பொதுமக்களின் எதிர்ப்பிலிருந்து காப்பாற்றவே தவெக வேட்பாளர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கியிருக்கலாம்.

திமுக ஆட்சியின் ஊழல் தொடர்பான 3 கோப்புகள் தனது மேஜையில் உள்ளது என்று முதல்வர் விஜய் தொடர்ந்து சொல்லி வருகிறார். அவர்கள் கையில் உள்ள ஆதாரங்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும் இடத்தில் இருப்பவர்கள் எங்களைப் பார்த்து ஏன் கேள்வி எழுப்புகிறார்கள். அவர்கள் அதுகுறித்து முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எந்த ஆட்சி இருந்தாலும் ஆதரவு - எதிர்ப்பு என்ற அணுகுமுறையை நாங்கள் கடைபிடிக்கிறோம். அது தவெக அமைச்சர்களுக்கு தெரியாமல் இருக்கலாம்” என்றார்.

<div class="paragraphs"><p>பட்டினப்பாக்கம் (இடது), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் (வலது)</p></div>
“முதல்வரின் லண்டன் பயணத்தை கிண்டல் செய்வதா?” - அண்ணாமலைக்கு மரிய வில்சன் பதில்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in